Ad Code

பவனி செல்கின்றார் ராசா • Pavani Selkintraar Rasa • Palm Sunday Song

 பவனி செல்கின்றார் ராசா – நாம் 

    பாடிப் புகழ்வோம், நேசா! (2)


அவனிதனிலே மறிமெல் ஏறி

    ஆனந்தம் பரமானந்தம் (2)


1. எருசலேமின் பதியே! சுரர்

        கரிசனையுள்ள நிதியே! (2)

    அருகில் நின்ற அனைவர் போற்றும் 

        அரசே எங்கள் சிரசே! (2)


2. பன்னிரண்டு சீஷர் சென்று நின்று

        பாங்காய் ஆடைகள் விரிக்க, (2)

    நன்னயம் சேர் மனுவின் சேனை

        நாதம் கீதம் ஓத. (2)


3. குருத்தோலைகள் பிடிக்க, பாலர் 

        கும்பல் கும்பலாக நடக்க, (2)

    பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று

        போற்ற மனம் தேற்ற. (2)

Post a Comment

0 Comments