Ad Code

இயற்கையும், இறைவரும் • God and Nature


உலகத்தை படைத்த இறைவன் (ஆதி 1:1-25) (சங் 136:5, 6). இயற்கையை ஆண்டுகொள்ளும் அதிகாரத்தை மனிதனுக்கு கொடுத்தார் (ஆதி 1:26,28) ஆண்டவர் படைத்து ஆளும் உரிமை தந்ததோடு மட்டுமல்லாது அதனை பராமரித்து பாதுகாக்கும் கட்டளையை தந்திருக்கிறார் (ஆதி 2:15).

இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கை வளங்களை பராமரிக்க பாதுகாக்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் இயற்கையின் அழகை காணும் போது மகிழ்ச்சி அடைகிறோம். இயற்கை வளங்களை பல்வேறு நன்மைகளுக்காக பயன்படுத்துகிறோம் நல்லது ஆனால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியிருக்கிறோமோ? அல்லது இயற்கை வளங்களை சேதப்படுத்தி இருக்கிறோமா? என்பதை சிந்தித்துபோம்.

ஆண்டவர் தந்த இயற்கையை நேசித்து ஆண்டவர் கொடுத்த முதன்மை கட்டளையை நிறைவேற்ற இந்நாளில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் நம்மை அர்பணிப்போம். வரும் தலைமுறைக்கு இயற்கையின் அருமையையும், பாதுகாப்பு அவசியத்தையும் அறிவிப்போம். இயற்கையில் மகிழ்ந்து ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். கர்த்தர் நன்மையானதை தருவார், தேசம் தன் பலனை கொடுக்கும். ஆண்டவர் நம்மை நம் தேச வளங்களை ஆசீர்வதித்து, நல்ல மழை தந்து வறட்சிகள் நீக்கி செழிப்பு தருவாராக.

Post a Comment

0 Comments