Ad Code

எலியா: கருத்தான ஜெபம் • Prayer of Elijah

தவக்கால தியானம்: 05
தலைப்பு: எலியா: கருத்தான ஜெபம்
வேத பகுதி: 1 இராஜாக்கள் 18:30-46

வேதாகம நபர் குறிப்பு
எலியா இஸ்ரவேலின் தீர்க்கதரிசி 
எலியா என்பதற்கு யெகோவா என் கடவுள் என்று அர்த்தம் 
காகங்கள் மூலம் போஷிக்கப்பட்டவர்
பாகால் தீர்க்கதரிசிகளையும் தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகளையும்
கர்த்தர் மூலம் வெட்டிப்போட்டார்
எலிசாவின் குரு
அக்கினி குதிரை இரத்தத்தில் சுழல்காற்றிலே உயிரோடு பரலோகத்திற்கு 
எடுத்துக்கொள்ளப்பட்டவர்.

விளக்கவுரை
உம்ரியின் குமாரன் ஆகாப் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ராஜாவானான்.ஆகாப்
தன் தகப்பனை காட்டிலும் கர்த்தருக்கு பொல்லாப்பானதை
செய்ததும் அல்லாமல் தன் மனைவி யேசபேலின் பாகால் தெய்வத்தை சேவித்து வந்தான். எலியா கர்த்தர் மூலம் இஸ்ரவேலுக்கு பஞ்சகாலம் குறித்து
தீர்க்கதரிசினம் சொன்னான். ஆனால் ஆகாப் மற்றும் அவன்‌ மனைவி யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளை கொன்று போட்டார்கள். இதனால் எலியா தன்னை ஒளித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் கர்த்தரோ காகங்கள் மூலம் எலியாவை போஷித்தார்.

ஆனாலும் எலியா சேனைகளின் கர்த்தராகிய தேவன் என்னோடு இருக்கிறார் என்கிற தைரியத்தோடு
400 பாகால் தீர்க்கதரிசிகளையும் 
450 தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகளையும் எதிர் கொண்டான்.
எலியா அந்த 850 தீர்க்கதரிசிகளிடம்
கர்த்தரே மெய்யான தெய்வம் என்று 
சவால் விட்டார். அந்த 850 தீர்க்கதரிசிகள் விறகுகளை வைத்து ஒரு காளையை துண்டித்து அதை பாகால் தெய்வம் அக்கினியால் பட்சிக்கும்படி
பாகாலை கூப்பிட்டார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை.எலியா அவர்களையும் பாகால் தெய்வத்தையும் பரியாசம் பண்ணினான்.

எலியாவும் இஸ்ரவேல் என்னும் பலிபீடத்தையும் அதை சுற்றி வாய்க்காலையும் உண்டு பண்ணி விறகுகளை வைத்து ஒரு காளையை துண்டித்து அதின் மேல் தண்ணீரையும் ஊற்றினான்.பின்பு எலியா நம்முடைய பிதாக்களின் தேவனிடத்தில்:நீரே தேவன் என்றும் நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். அப்பொழுது கர்த்தரின் அக்கினி எல்லாவற்றையும் படசித்து போட்டது.இதை கண்ட ஜனங்கள் எல்லாரும் கர்த்தரே தெய்வம் என்றார்கள்.மேலும் எலியா பாகால் தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் கொன்று போட்டான்.

கற்றுக்கொள்ளும் பாடம்
ஆகாப் மன்னன் மற்றும் யேசபேலிடம் இருந்து எலியாவை காத்த
உண்மையான தேவனாகிய கர்த்தரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட
நம்மையும் எந்த சூழ்நிலையிலும் அவர் காப்பார்.
எலியா ஏறெடுத்த கருத்தான ஜெபம் மற்றும் விசுவாசம் அநேக ஜனங்களை இரட்சித்தது. இன்றைய காலகட்டத்திலும் பெருமை,பணம் போன்ற இன்னும் அநேக பாகாலை சேவித்து கொண்டிருக்கிறார்கள்.
அழைக்கப்பட்ட நாம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்கிற தைரியத்தோடும், விசுவாசத்தோடும்
ஜெபித்தால் நிச்சியம் நம்மை கொண்டும் அநேக ஜனங்களை இரட்சிக்க பயன்படுத்துவார்.

எழுதியவர்
B. டேவிட் ஆன்ரோ

Coordinated by 
SMC Youth Fellowship 

Post a Comment

0 Comments