"பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள்" - 1 தெச. 5:19
நம் தமிழ் வேதாகமத்தில் இப்படியாக இந்த வசனம் இராது. இந்த வசனத்தை ERV எனப்படும் பரிசுத்த பைபிளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
"ஆவியை அணைத்துப் போடாதிருங்கள்" என நம் தமிழ் வேதாகமத்தில் உள்ளது.
அப்.நட. 2-ஆம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானர் வல்லமையாக இறங்கினார். அந்த ஆவியானவர் தொடர்ச்சியாக நமக்குள் பற்றி எரிந்துகொண்டே இருக்க வேண்டும். அதனால் தான் "ஆவியை அணைத்துப் போடாதிருங்கள்" அல்லது "பரிசுத்த ஆவியானவருக்கான வேலையை நிறுத்தாதிருங்கள்" என அப்.பவுல் கூறுகிறார்.
"அணைத்துப் போடுதல் - Quench" என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை *σβέννυμι ஸ்பென்னுமி* என்பதாகும்.
இந்த வசனத்தை மற்றொரு வகையில் வியாக்கியானித்தால், "பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசனமாக ஒருவரைக் கொண்டு ஒன்றை உரைப்பாரானால் அவ்வாறு உரைப்பவரை தடைசெய்யாதிருங்கள்" என்று பொருள்.
இதை தீர்க்கதரிசனத்துக்கு மட்டும் குறிப்பிடாது, "பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் எந்த ஊழியத்தை / எந்த நற்கிரியைகளை செய்யச் சொல்லி ஏவுகிறாரோ அதை செய்துவிடுங்கள், அந்த ஏவுதலை அணைத்துவிடாதீர்கள்.
மேலும் நாம் பாவம் செய்வதன் வழியாகவும் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தி பரிசுத்த ஆவியானவரை கிரியை செய்யவிடாமல் அணைத்துவிட முடியும் (அப்.நட. 7:51 ; எபி. 10:29; எபேசி. 4:30).
எழுதியவர்
போதகர் செ. டேவிஸ்,
கைப்பேசி : +91 8610304994
0 Comments