துரோகத்திலும் பசுமை மாறாது
சங்கீதம் 52 ஏதோமியனான தோவேக்கு, சவுல் ராஜாவிடம் தன்னைக் காட்டிக்கொடுத்த பிறகு, நோபில் 85 ஆசாரியர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, தாவீதால் எழுதப்பட்டது (1 சாமுவேல் 21-22). இது தோவேக்கின் துன்மார்க்க துரோகம் மற்றும் தீய பேச்சைப் பிரதிபலிக்கும் ஒரு "மஸ்கில்" (அறிவுறுத்தல்) சங்கீதம்.
தீமை மற்றும் வஞ்சகமான, கூர்மையான வார்த்தைகளில் பெருமை பேசிய இந்த "வல்லமையுள்ள மனிதனை" (தோவேக்) குறித்து சொல்லி இந்த சங்கீதத்தை ஆரம்பிக்கிறார். இந்த மனிதனின் வார்த்தைகள் பொல்லாங்கு நிறைந்த கபட நாவில் இருந்து புறப்படும் கேடு செய்யும் நோக்கம் கொண்டவை.
கடவுள் துன்மார்க்கரை அழித்து, பிடுங்கி, அவர்களின் வீட்டிலிருந்து இழுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையை தாவீது வெளிப்படுத்துகிறார். இது கடவுளின் அன்பில் நம்பிக்கை வைப்பவர்களின் செழிப்புடன் துன்மார்க்கரின் அழிவை வேறுபடுத்தி காண்பிக்கிறது.
துன்மார்க்கரின் நிலையற்ற சக்திக்கு மாறாக, தாவீது தன்னை கடவுளின் வீட்டில் ஒரு செழிப்பான ஒலிவ மரமாக விவரிக்கிறார். காரணம் தாவீது தன் கடவுளின் உறுதியான அன்பை நம்பியுள்ளார்.
நாமும் பிறர் நமக்கு விரோதமாக பேசும் போது, செயல்படும் போது, கோபம் கொள்ளாமல், ஆண்டவரை நம்பி, அவர் காட்டும் வழியில் நடப்போம்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments