இந்திய கிரிக்கெட் அணி கண்டிருந்த மதத்தான தலைவன் மகேந்திர சிங் தோனி. ஆனால், ஆரம்ப கட்டத்தில் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதனால், நிராகரிப்பு நடந்த தினத்தில் தோனியின் நண்பர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தனர். ஆனால், தோனி உற்சாகமாக அவர்களுக்கு இனிப்பும், காரமும் வாங்கி கொடுத்து கொண்டாடினார்.
"ஏன் இப்படி செய்கிறாய்? உனக்கு என்ன மனநிலை பாதித்து விட்டதா?" என நண்பர்கள் கேட்ட போது, தோனி சிரித்தபடி சொன்னார், "இல்லை இந்திய அணியில் நுழைவதற்கு எப்படிப்பட்ட தகுதி வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அதனால், உற்சாகமாக இருக்கிறேன். அதை வளர்த்துக் கொண்டு சீக்கிரமே அணியில் நுழைவேன்" என்றார்.
தன் சொந்த ஊரில் பாதுகாப்பாக இருப்பதா அல்லது தனக்கு அறிமுகமே இல்லாத புதிய ஊருக்கு சென்று வாய்ப்புகளை தேடுவதா? என்று கேள்வி எழுந்த போது தோனி அதிகம் யோசிக்கவில்லை. தான் செல்ல வேண்டிய ரயிலை பிடித்து ஏறினார். அந்தப் பயணம் அவரை உலகின் எல்லா மூலைகளுக்கும் அழைத்துச் சென்று புகழின் சிகரத்தில் ஏற்றி வைத்தது.
சில ரயில்களை பிடித்தால்தான் புது வாய்ப்புகளை அடைய முடியும். சில தடங்கல்களை தவிர்த்தால் தான் நாம் உறுதியுடன் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம். சொந்த ஊரில், தெரிந்த மனிதர்களிடையே இருப்பது பாதுகாப்பானது (Comfort Zone). ஆனால், புகழின் சிகரத்தை அடைய வேண்டும் என்றால், அறிமுகமில்லாத இடங்களுக்குச் செல்லவும், சவால்களை எதிர்கொள்ளவும் துணிச்சல் வேண்டும். அன்று அவர் ஏறிய அந்த ரயில், வெறும் பயணத்திற்கானதல்ல; அது லட்சியத்தை நோக்கிய பயணம்.
தோனியின் இந்த வாழ்க்கைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த நேர்மறைச் சிந்தனைக்கு (Positive Thinking) எடுத்துக்காட்டு. தோல்வி அல்லது நிராகரிப்பு என்பது ஒரு கதவு அடைக்கப்படுவது அல்ல, மாறாக நம்மிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்பதை அவர் அன்று நிரூபித்தார்.

0 Comments