திருவசன தியானம் 2026
1. ஞாயிறு குறிப்புகள்
கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் 4-ம் ஞாயிறு
தேதி: 03/05/2026
வண்ணம்: வெள்ளை
திருமறைப் பாடங்கள்:
பழைய ஏற்பாடு: எரேமியா 31:1-6
நிருப வாக்கியம்: எபேசியர் 3:14-19
நற்செய்தி பகுதி: யோவான் 21:15-19
சங்கீதம் 63
2. திருவசனம்
தலைப்பு: உள்ளார்ந்த அன்புடன் கிறிஸ்துவை பின்பற்றுதல் யோவான் 21:17
பவர் திருப்புதல் : ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
திருவிவிலியம்: ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளைப் பேணிவளர்.
3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் நாட்களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களிலிருந்து சிந்திக்க ஒவ்வொரு ஞாயிறும் தலைப்பு கொடுக்கப்படுகிறது.
4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: யோவான் அப்போஸ்தலர்
அவையோர்:
வசன பின்னணி: இயேசு உயிர்த்தெழுந்ததை கண்ட சீடர்களில் ஒருவராகிய பேதுரு அப்போஸ்தலர் தனது சொந்த பணியைப் பார்க்க சென்ற போது, இயேசு அவருடன் தனிமையில் உரையாடியதை விளக்குகிறது.
5. திருவசன விளக்கவுரை
பேதுருவின் துயரம் அழைத்த ஆண்டவரின் பாரத்தை தன்மீது ஏற்றுக்கொள்ளுதலை குறிக்கிறது. அழைத்த இயேசுவின் அன்பைப் புரிந்துகொண்டு நடக்கும் குணத்தைப் பேதுரு ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்துகிறது (V.17 a). பேதுருவின் அறிக்கை தன்னை அழைத்த ஆண்டவர் தனது வாழ்வின் மூன்று காலத்தையும் (கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்) ஆய்ந்து சரியான வழியில் தன்னை நடத்துவார் எனும் உறுதியின் வெளிப்பாடு (V.17 b). இயேசு பேதுருவிடம் கூறிய வார்த்தை பேதுருவைக் குறித்ததான உலக வாழ்வின் திட்டத்தை காண்பிக்கிறது (V.17 c).
6. இறையியல் & வாழ்வியல்
இயேசுவை பின்பற்றுகிறேன் என்று வாயினால் அறிக்கையிடுவதும், ஆலயத்திற்கு தவறாமல் செல்வதும், ஆண்டவருக்கு காணிக்கைகளைக் கொடுப்பதும் இயேசுவைப் பின்பற்றி வாழ்வதற்கு வெளிப்புறமான அடையாளங்களாக நாம் எண்ணினாலும், கடவுளின் பார்வையில் இயேசுவின் பாரத்தையும், நமது வாழ்வின் நோக்கத்தையும் சரியாய் புரிந்துகொண்டு வாழ்வதுதான் இயேசுவை உள்ளார்ந்த அன்புடன் பின்பற்றுதல்.
7. அருளுரை குறிப்புகள்
அ) அழைத்தவரைப் புரிந்து கொள்ளுதல் V.17 a
ஆ) அழைத்தவரிடம் முழுமையாய் அர்ப்பணித்தல் V.17 b
இ) அழைத்தவரின் நோக்கத்தை நிறைவேற்றுதல் V. 17 c
Written by
Mr. Christhu Rajaiah
CSI Diocese of Tirunelveli

0 Comments