Ad Code

துணிச்சல் – அப்போஸ்தலர் 14:19-20 Paul's Lessons 03

பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 03

துணிச்சல் – அப்போஸ்தலர் 14:19-20

லீஸ்திராவில் பவுல் ஒரு சப்பாணியைக் குணமாக்கியதால் மக்கள் அவரைத் தெய்வமாகப் பார்த்தனர். ஆனால் அந்தியோகியா, இக்கோனியாவிலிருந்து வந்த எதிரிகள் மக்களின் மனதைத் தூண்டிவிட்டு பவுலுக்கு எதிராகத் திருப்பினார்கள். மக்கள் பவுலை கல்லெறிந்து, அவர் மரித்துவிட்டதாக நினைத்து ஊருக்கு வெளியே இழுத்துப் போட்டனர். ஆனால் சீஷர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது, அவர் எழுந்து மீண்டும் அதே பட்டணத்திற்குள் சென்றார். மறுநாளே தைரியமாக, அடுத்த ஊருக்கு ஊழியத்திற்காகப் புறப்பட்டார்.

 1. ஒருமுறை காயப்பட்ட இடத்திற்கே மீண்டும் செல்லும் மன உறுதி நமக்கு உண்டா?
 2. மக்கள் புகழும்போது மகிழ்வதும், கல்லெறியும்போது சோர்ந்து போவதும் நியாயமா?
 3. விழுந்து கிடக்கும்போது நம்மைச் சூழ்ந்து நின்று தாங்க ஒரு விசுவாசக் கூட்டம் இருக்கிறதா?

துணிச்சல் என்பது அடி வாங்காமல் இருப்பதல்ல, அடி பட்ட பின்பும் சோர்ந்து போகாமல் மீண்டும் எழுந்து கடமையைச் செய்வதாகும். நம்மைத் தள்ளிவிடும் உலகம் ஆச்சரியப்படும் வகையில், விழுந்த இடத்திலேயே எழுந்து நிற்பதே உண்மையான விசுவாசம். கடவுள் தரும் துணிச்சல் அவருக்காக பயன்படட்டும். இறையாசி
உங்களோடிருப்பதாக.

Lessons from Paul's Life Journey 

Acknowledgement 
Meyego 

Post a Comment

0 Comments