Ad Code

தற்குறி யார்? Tharkuri

தன் + குறி = தற்குறி. இதன் நேரடிப் பொருள் "தன்னுடைய குறி" (தன்னுடைய அடையாளம்) என்பதாகும்.

தற்குறி (Tharkuri) என்பது எழுதப் படிக்கத் தெரியாதவர் தன் கையெழுத்துக்குப் பதிலாக இடும் விரல்கீறல் அல்லது கைநாட்டை குறிக்கும் சொல்லாகும். சுருங்க சொன்னால், தற்குறி என்பது எழுதத் தெரியாதவர் தன் அடையாளமாக இடும் கைரேகை (Thumb impression) ஆகும். தன்னுடைய பெயருக்குப் பதிலாக ஒரு "குறியை" மட்டும் இடுபவர் என்பதால் அவர்கள் "தற்குறி" என அழைக்கப்பட்டனர். 

தற்காலத்தில் படிப்பறிவற்றவர்களைக் குறிக்க, அரசியல் விமர்சனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக மாறியுள்ளது. 

காலப்போக்கில், ஒருவருக்கு அடிப்படை விவரங்கள் தெரியவில்லை என்றாலோ, ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை என்றாலோ, அவர்களை அறிவில்லாதவர் என்று சுட்டிக்காட்ட இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.

'தற்குறி' என்றால் சுயநலம் (Selfish) என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது, ஆனால் அது தவறானது


Post a Comment

0 Comments