Ad Code

விடுவிக்கும் இறைநீதி Redeeming Divine Mishpat • May 2026

Divine Mishpat Series 05

விடுவிக்கும் இறைநீதி
Redeeming Divine Mishpat 

பொதுவாக நீதி என்பது தவறு செய்தவர்களைத் தண்டிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் "மிஷ்பாட் என்னும் இறைநீதி" என்பது தண்டனையோடு நின்றுவிடாமல், பாதிக்கப்பட்டவரை விடுவித்து மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது.

ஏசாயா 1.27 சொல்லுகிறது: 
"சீயோன் நீதியுடனும், மனந்திரும்பியவர்கள் நேர்மையுடனும் விடுவிக்கப்படுவார்கள்." 
"சீயோன் நீதியினாலும் (Mishpat), அதின் மனந்திரும்புகிறவர்கள் அறத்தினாலும் (Tzedakah) மீட்கப்படுவார்கள்."
"Zion will be delivered with justice, her penitent ones with righteousness" (Isaiah 1.27).

ஏசாயா 1 ஆம் அதிகாரத்தில், எருசலேமின் சீர்கேட்டைக் கண்டித்ததைத் தொடர்ந்து, கடவுள் அந்த நகரத்தை மீண்டும் சீரமைப்பார் என்று இந்த வசனம் வாக்குறுதி அளிக்கிறது. இந்த அதிகாரம் மனந்திரும்ப அழைப்புக் கொடுக்கும் இறைவார்த்தையாகும். 

1. இறைநீதி தரும் விடுதலை
ஏசாயா 1.27 உணர்த்தும் வாக்குறுதி, இறைநீதி விடுவிக்கிறது. இறைவன் ஒருபோதும் அழிவில் மகிழ்வதில்லை. ஏசாயா 1-ம் அதிகாரம் முழுவதும் மக்களின் அநீதிகளைக் கண்டித்தாலும், 27-வது வசனத்தில் ஒரு மாபெரும் நம்பிக்கையை அளிக்கிறார். அநீதியால் கறைபட்ட ஒரு சமூகத்தை, இறைவன் தனது நீதியின் மூலம் சுத்திகரித்து,விடுவித்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறார்.

2. மனந்திரும்பினால் கிடைக்கும் விடுதலை
இந்த வாக்குறுதி அனைவருக்கும் பொதுவானது அல்ல; இது "மனந்திரும்புகிறவர்களுக்கு" உரியது.
ஒரு மனிதன் தன் தவறுகளை உணர்ந்து இறைவனிடம் திரும்பும்போது, இறைநீதி அவனைத் தண்டிக்கும் 'தராசாக' இல்லாமல், அவனை விடுவிக்கும் 'திறவுகோலாக' செயல்படுகிறது.

"உண்மையான விடுதலை என்பது அநீதியிலிருந்து தப்பிப்பதல்ல, இறைநீதியின் வழியில் நின்று தீமையிலிருந்து விடுபடுவதே ஆகும்." ஆகவே, இறைநீதி எங்கே நிலைநாட்டப்படுகிறதோ, அங்கே விடுதலை தானாகவே மலர்கிறது. நாம் உண்மையாக, கடவுளிடம் திரும்பி, நம்மை அர்ப்பணிப்போம். அவர் விடுதலையின் வாழ்வை நமக்கு அருள்செய்வாராக. 
இறையாசி
உங்களோடிருப்பதாக...
Meyego 
May 2026

Post a Comment

0 Comments