வேதாகமத்தை எபிரெயம் மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தபோது, கடவுளின் பெயர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இன்றும் விவாதத்திற்குரியதாகவே உள்ளன. குறிப்பாக, 'தேவன்' என்ற சொல் மூல மொழிகளின் ஆழமான பொருளை முழுமையாகப் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
‘தேவன்’ என்ற சொல்லின் குறைபாடுகள்
சிறு தெய்வக் குறியீடு: 'தேவன்' என்பது சமஸ்கிருத மூலச் சொல் (Deva). இது இந்து மற்றும் ஆசியப் பண்பாடுகளில் பிறப்பு, இறப்புக்கு உட்பட்ட முப்பத்து முக்கோடி 'சிறு தெய்வங்களை' குறிக்கப் பயன்படுகிறது. விவிலியம் கூறும் ஒரே மெய்யான கடவுளுக்கு இச்சொல் பொருந்தாது. இதனால் இச்சொல் கடவுளின் உன்னத நிலையைச் சிறுமைப்படுத்துகிறது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பேராயர் ராபர்ட் கால்டுவெல், தமிழ் ஆன்மீகச் சிந்தனைகளில் 'கடவுள்' மற்றும் 'இறைவன்' ஆகிய சொற்கள் கொண்டுள்ள தத்துவ ஆழம் சமஸ்கிருத 'தேவ' என்ற சொல்லுக்கு இல்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
மூல மொழியும் தமிழாக்கமும்
எபிரெய மொழியில் கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டவை:
ஏலொஹிம் (Elohim): ஒருமை-பன்மையற்ற பரம்பொருள் (ஆங்கிலத்தில் GOD). இதன் உண்மையான தமிழ்ப் பொருள்: ‘கடந்து உள்ளத்துள் வந்து உறைபவர்’ (கடவுள்).
யெஹோவா (Yehovaw): இருக்கிறவராகவே இருக்கிறவர் (ஆங்கிலத்தில் LORD). தமிழில் 'ஆண்டவர்'.
ஏல் (El): வலிமைமிக்கவர் (ஆங்கிலத்தில் God). தமிழில் 'இறைவன்'.
'தேவன்' என்ற சொல் முற்றிலும் தவறான வார்த்தை இல்லை என்றாலும், விவிலியக் கடவுளின் தனித்துவத்தை விளக்க அது போதாமையான, குழப்பமான சொல். எனவே, விவிலியப் பொது மொழிபெயர்ப்பின்படி கடவுளை 'கடவுள்', 'ஆண்டவர்', 'இறைவன்' என்று அழைப்பதே மிகவும் பொருத்தமானது.
மேயேகோ
9486810915

0 Comments