Ad Code

ஜே.சி.டி. பிரபாகர் யார்? கிறிஸ்தவ அரசியல்வாதி • Christian Politician

ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான கிறிஸ்தவ அரசியல்வாதிகளில் ஒருவர். 

இளமை காலம்
ஜே.சி.டி. பிரபாகர் திண்டுக்கல்லில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இளமைக்காலத்திலேயே பொதுவாழ்வில் ஈடுபட்டார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்
ஜே.சி.டி. பிரபாகர் சென்னை வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து இரண்டு முறை தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1980 மற்றும் 2011 தேர்தல்கள்). சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நடவடிக்கைகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டார்.

தற்காலிக சபாநாயகர் 
ஜே. சி. டி. பிரபாகர் அவர்கள் 2011ஆம் ஆண்டு தற்காலிக சபாநாயகராக அதிமுக சார்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்
இவர் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி சார்பாக 2026 இல் MLA ஆனார். 
 
தமிழக சட்டசபை சபாநாயகர்
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் மே 12, 2026 அன்று பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 2026 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்று MLA ஆனார். 12.05.2026 அன்று சட்டசபையில் பரிசுத்த வேதாகம வசனங்களை பயன்படுத்தி இறைவனுக்கு மகிமை செலுத்தினார்.

கட்சிப் பொறுப்புகள்
ஜே.சி.டி. பிரபாகர் அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர், கட்சியின் அமைப்புச் செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். மறைந்த முதலமைச்சர்கள் MGR & J. ஜெயலலிதா அவர்களிடம் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவராகத் திகழ்ந்தவர்.
  
போக்குவரத்து மற்றும் விளையாட்டு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்கங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்து நிர்வாக ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
 
கால்பந்து சங்கம்
சென்னை மற்றும் தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் (CFA & TFA) தலைவராக இருந்து விளையாட்டை மேம்படுத்தப் பாடுபட்டார். 


Post a Comment

0 Comments