Ad Code

பொது மொழிபெயர்ப்பில் கடவுள் ஏன்? God in Common Tamil Translation

 1. ஏலொஹிம் (Elohim) என்கிற பன்மைச் சொல்லுக்கு, ஒருமைப் பன்மையற்ற, கடவுள் என்ற சொல்; ஆங்கிலத்தில், GOD (all capitals). கடவுள் என்பதற்கு, கடந்து உள்ளத்துள் வந்து உறைபவர் என்று பொருள்; மூவொரு கடவுளாக விளங்கும் ஏலொஹிம்; அவரே உள்கடந்து வருபவர்- ஒருமைப் பன்மையற்ற கடவுள் என்ற பெயரில் அழைத்தலே சிறப்பு.
 2. யெஹோவா (Yehovaw), என்கிற சொல்லுக்கு "ஆண்டவர்"; ஆங்கிலத்தில், LORD (all capitals).
 3. ஏல் (El) என்ற ஒருமைச் சொல்லுக்கு, இறைவன்; ஆங்கிலத்தில், God அல்லது god.
 4. அடொனாய் (Ad-o-noy, எஜமானர்) என்கிற சொல்லுக்கு, தலைவர்; ஆங்கிலத்தில், Lord.

இவ்வாறு பொது மொழிபெயர்ப்பில், கடவுள், ஆண்டவர், இறைவன், தலைவர் என்கிற பொதுப் பெயர்களில், கடவுள் அழைக்கப்படுகிறார். தேவன் என்று வருவதில்லை.

Post a Comment

0 Comments