Ad Code

தமிழக கிறிஸ்தவ சபாநாயகர்கள் • Christian Speakers in Tamil Nadu

தமிழக சட்டமன்ற வரலாற்றில் கிறிஸ்தவ  பின்புலம் கொண்ட முக்கிய சபாநாயகர்கள்:

1. எஸ். செல்லப்பாண்டியன்
மார்ச் 31, 1962 முதல் மார்ச் 14, 1967 வரை தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர் ஆவார்.
 
2. மு. அப்பாவு:
2021 முதல் 2026 வரை 16-வது சட்டமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார். திமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்று MLA ஆனார். இவர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். 

3. ஜே.சி.டி. பிரபாகர்:
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் மே 12, 2026 அன்று பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 2026 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்று MLA ஆனார். 12.05.2026 அன்று சட்டசபையில் பரிசுத்த வேதாகம வசனங்களை  பயன்படுத்தி இறைவனுக்கு மகிமை செலுத்தினார். மேலும் ஜே. சி. டி. பிரபாகர் அவர்கள் 2011-ஆம் ஆண்டு தற்காலிக சபாநாயகராக அதிமுக சார்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைச் சபாநாயகர்
1. டி. லாரன்ஸ்:
டி. லாரன்ஸ் அவர்கள் 1991 முதல் 1996 வரை தமிழக சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments