Ad Code

Divine Justice that Restores Coustoms வழக்கத்தை மீட்டெடுக்கும் இறைநீதி • ஜூன் 2026 June

Mishpat Series 06
வழக்கத்தை மீட்டெடுக்கும் இறைநீதி
Divine Justice that Restores Coustoms

இறைமைந்தர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள். இந்த ஆண்டின் ஆறாவது மாதத்தில் அடியெடுத்து வைக்க அருள் செய்த ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். வழக்கத்தை மீட்டெடுக்கும் இறை நீதி என்ற தலைப்பில் தியானிப்போம்.

ஆதியாகமம் 40:13 சொல்லுறது: "மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார். முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்." 

ஆதியாகமம் 40:13-ல் வரும் மிஷ்பாட் (Mishpat) வார்த்தை வழக்கம் என்று மொழிபெயர்க்கப்பட்டாலும், இயல்பாகவே ஒரு நீதிமன்றத் தீர்ப்போடு (judicial verdict) தொடர்புடையது என்பதால், இந்த இடத்தில் அதன் பயன்பாடு ஒரு நுட்பமான விஷயத்தை உணர்த்துகிறது. இங்கு, வழக்கத்தை மீட்டு எடுப்பதில் இருக்கும் இறை நீதி எப்படி வெளிப்பட்டது என்பதைப் பார்ப்போம். 

1. முறையான ஒழுங்கு / அன்றாடக் கடமை (The Proper Order / Routine)
மிஷ்பாட் என்ற பதம் இழந்துபோய் மீண்டும் மீட்கப்படும். அந்தப் பதவிக்குரிய அங்கீகரிக்கப்பட்ட, வழக்கமான கடமைகளைக் குறிக்கிறது. இது ஏதோ தற்செயலாகச் செய்யும் ஒரு சாதாரண பழக்கம் அல்ல; ஒரு அரச அதிகாரமிக்க பானபாத்திரக்காரன் (cupbearer) தன் ராஜாவுக்கு எப்படி பணிவிடை செய்ய வேண்டும் என்பதற்கான முறையான நெறிமுறை (protocol) ஆகும். அநீதியாய் இழந்த இந்த முறையான நிலைக்கு ஒருவரை மீண்டும் உயர்த்துவதுதான் இறைநீதியின் வெளிப்பாடு.

2. நிலைநிறுத்தப்படும் மறுவாழ்வுத் தீர்ப்பு (A Verdict of Restoration)
குற்றவாளி என்ற முத்திரையோடு சிறையில் இருந்த பானபாத்திரக்காரனுக்கு, மீண்டும் வாழ்வு கிடைப்பது என்பது அவனது தகுதி மற்றும் நிலையை அதிகாரப்பூர்வமாகவும், சட்டப்பூர்வமாகவும் மீட்டெடுக்கும் ஒரு செயலாகும். அவன் தனக்குரிய சட்டப்பூர்வமான உரிமைக்கும், அரசவையில் முன்பு இருந்த இடத்திற்கும் மீண்டும் இறைநீதி மூலம் திரும்புகிறான்.

3. தெய்வீக நெறிமுறை / தரம் (The Divine Standard)
யோசேப்பு இந்த உரையாடலின் தொடக்கத்திலேயே, "சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுதல் இறைவனுக்குரியதல்லவா?" (ஆதி 40:8) என்று கூறுகிறான். இந்த நிகழ்வுகள் ஏதோ தற்செயலாகவோ அல்லது அரசியல் சூழ்நிலையாலோ நடக்கவில்லை; மாறாக, இவை அனைத்தும் கடவுளால் திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தெய்வீக ஒழுங்கின்படிதான் அரங்கேறுகின்றன என்பதை இந்த வாக்கு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

அநீதியால் உடைக்கப்பட்டு இருக்கிறாயோ?
முடக்கப்பட்டு இருக்கிறாயோ?
சோர்ந்து போகாதா.
ஏற்றக் காலத்தில் 
உன் நிலையில் உன்னை நிறுத்துவார் (உயர்த்துவார்);
உனக்கு கடவுள் கொடுத்த வழக்கத்தின் படியே உன் காரியங்களை மீண்டும் செய்ய அவரே வழியைத் திறப்பார். இதுவே இறை நீதி (மிஷ்பாட்).

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ+
01.06.2026

Post a Comment

0 Comments