Ad Code

அலெக்ஸாண்டர் (சிரேனே ஊரான் சீமோன் மகன்) Alexander Bible Characters,

திருமறையில் யார் இவர் யாரோ? - 45
அலெக்ஸாண்டர்: சிலுவை வீரரின் தலைமுறை

1. பெயர்: அலெக்ஸாண்டர் (சிரேனே ஊரான் சீமோன் மகன்) Alexander

2. அர்த்தம்: 
"மக்களின் பாதுகாவலன்" (Defender of the people) 

3. சிறுகுறிப்பு: 
• சிரேனே ஊரானாகிய சீமோனைப் பலவந்தம் செய்து, இயேசுவின் சிலுவையை அவர் சுமக்க வைத்தனர். இவரைக் குறிப்பிடும் போது, பிள்ளைகளின் பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறார்.
• 1941-ல் எருசலேமில் உள்ள கித்ரோன் பள்ளத்தாக்கில் (Kidron Valley) கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழங்காலப் புதைபொருள் கல்லறையில் (Ossuary - எலும்புகளை வைக்கும் பெட்டி) உள்ள பெட்டி கிபி 70-க்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. 
• அந்தப் பெட்டியில் "அலெக்ஸாண்டர், சீமோனின் மகன்" (Alexandros son of Simon) என்றும் "சைரேனியன்" (Cyrenian) என்பதைக் குறிக்கும் சொல்லும் உள்ளது. 

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
மாற்கு நற்செய்தி நூல் எழுதிய காலத்தில் வாழ்ந்த அலெக்சாந்தர் மற்றும் ரூபஸ் ஆகிய சீமோனின் பிள்ளைகளின் பெயர்கள் குறிப்பிடப்படுவது, இயேசுவின் சிலுவைப்பாடுகளை நேரில் கண்ட சாட்சிகள் என்பதைக் காட்டுகிறது. அக்கால விசுவாசிகளுக்கு உயிரோடிருக்கும் இவர்களை நன்கு தெரிந்திருந்ததால், இவர்களிடமிருந்து நேரடியாகச் செய்தியை உறுதிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு வாசகர்களுக்கு இருந்தது. இது நற்செய்தியின் வரலாற்று நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மாற்கு 15:21

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments