திருமறையில் யார் இவர் யாரோ? - 91
சொஸ்தனே: எதிர்ப்புகள் அழிக்க அல்ல
1. பெயர்:
சொஸ்தனே Sosthenes
2. அர்த்தம்:
பாதுகாப்பான பலம்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 18:17 – கொரிந்து பட்டணத்தில் ஜெபஆலயத் தலைவனாக இருந்த சொஸ்தனே நியாயாசனத்திற்கு முன்பாக அடிக்கப்பட்ட சம்பவம்.
1 கொரிந்தியர் 1:1 – அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு நிருபம் எழுதும்போது இவரை "சகோதரனாகிய சொஸ்தனே" என்று குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• ஜெபஆலயத் தலைவன்: கொரிந்தில் கிறிஸ்புவுக்குப் பின் ஜெபஆலயத் தலைவரானார்.
• துன்புறுத்தல்: பவுலின் வழக்கை அதிபதி கல்லியோ தள்ளுபடி செய்ததால், ஆத்திரமடைந்தக் கூட்டத்தினர் சொஸ்தனேவை நியாயாசனத்தின் முன் அடித்தனர்.
• மாற்றம் & ஊழியம்: இதன்பின் இயேசுவை ஏற்றுக்கொண்டு, எபேசுவில் பவுலின் விசுவாசமிக்க உடன்வேலையாளாக மாறினார் (1 கொரிந்தியர் 1:1).
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
நமக்கு நேரிடும் துன்பங்களும், எதிர்ப்புகளும் நம்மைத் இறைவனிடமிருந்து பிரிப்பதற்குப் பதிலாக, தேவனை நோக்கி நம்மை நடத்தும் பாதையாக மாறக்கூடும். அன்று நியாயாசனத்திற்கு முன்பாக அடிபட்ட சொஸ்தனே, சோர்ந்துபோகாமல் தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். தேவ கிருபை அவரை ஒரு சாதா யூதத் தலைவரிலிருந்து, அப்போஸ்தலனாகிய பவுலுக்கு நிகரான ஒரு விசுவாசமிக்க ஊழியத் தோழனாக உயர்த்தியது
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments