வேதாகமத்தில் வரும் 'தாமார்' என்ற பெயருடைய மூன்று வெவ்வேறு பெண்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் பார்ப்போம்.
1. யூதாவின் மருமகள் தாமார் (0:50 - 4:09): இவள் யூதாவின் மூத்த மகன் ஏரின் மனைவி. தன் கணவனின் வம்சம் அழியாமல் இருக்க, அவள் எடுத்த துணிச்சலான முடிவால், இயேசு கிறிஸ்துவின் வம்சாவளியில் இடம் பெற்றாள் (பாரேஸ் மற்றும் சேரா தாயாக).
2. தாவீதின் மகள் தாமார் (4:10 - 6:35): இவள் தாவீது ராஜாவின் மகள் மற்றும் அப்சலோமின் சகோதரி. தன் சகோதரன் அம்மோனால் இவள் கொடுமைக்கு உள்ளானாள். இவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக, அப்சலோம் அம்மோனை பழிவாங்குகிறான்.
3. அப்சலோமின் மகள் தாமார் (6:36 - 6:53): இவள் தாவீதின் பேத்தி. இவள் மிகுந்த அழகுடையவள். இவளைப் பற்றி வேதாகமத்தில் ஒரு வசனத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, தன் சகோதரியின் நினைவாக அப்சலோம் இவளுக்கு இந்த பெயரை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த மூன்று பெண்களின் பெயர்கள் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் சந்தித்த சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. எத்தகைய இக்கட்டான சூழலிலும் இறைவனுடைய திட்டத்தை உணர்ந்து, நம்பிக்கையோடு வாழ வேண்டும்.

0 Comments