Ad Code

தமிழ்நாடு வரலாறு Tamil Nadu History சென்னை vs மெட்ராஸ்

பிரிட்டிஷ் காலம் (மெட்ராஸ் பிரசிடென்சி):
பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகள் மெட்ராஸ் பிரசிடென்சி என்ற பெயரில் ஒரே நிர்வாக அமைப்பாக இருந்த பகுதிகள்: ஆந்திரா (முழுவதுமாக அல்லது அதன் பெரும்பகுதி), கேரளா (மலபார் போன்ற சில பகுதிகள்), கர்நாடகா (பெல்லாரி மற்றும் தெற்கு கன்னட மாவட்டங்கள் போன்ற சில பகுதிகள்).

மெட்ராஸ் ஸ்டேட் (1950):
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1950-ல் இது மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்டது.

முதல் பொதுத்தேர்தல் (1952):
சுதந்திர இந்தியாவிற்குப் பிறகு மெட்ராஸ் மாநிலத்தில் நடைபெற்ற முதல் ஜனநாயகத் தேர்தல்.

ஆந்திரா பிரிவினை (1953):
தெலுங்கு மொழி பேசும் மக்கள் தனி மாநிலம் கேட்டதைத் தொடர்ந்து, 1953-ல் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
 
மொழிவாரி மாநில மறுசீரமைப்பு (1956):
1956-ல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

தியாகி சங்கரலிங்கனாரின் தியாகம் (1956):
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றக் கோரி 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர்நீத்தார்.

வடஎல்லைப் போராட்டம் மற்றும் திருத்தணி இணைப்பு (1960):
ம.பொ. சிவஞானம் (ம.பொ.சி) அவர்களின் போராட்டத்தின் விளைவாக, ஆந்திராவிடம் இருந்த திருத்தணி பகுதி தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டது.

பெயர் மாற்றம் (1969):
நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, சி.என். அண்ணாதுரை தலைமையிலான அரசு, 1969 ஜனவரி 14 அன்று மெட்ராஸ் ஸ்டேட் என்பதை முறைப்படி தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது. 

தலைநகரம் பெயர் மாற்றம் (1996):
'மெட்ராஸ்' என்ற தலைநகரத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'சென்னை' என மாற்றப்பட்டது.

Post a Comment

0 Comments