அப்போஸ்தலர் 3-ல் ஆலய வாசலில் அமர்ந்திருந்த நடக்க முடியாத மனிதனின் வாழ்க்கையைப் பார்க்கிறோம். இந்தப் பகுதி, மாற்றுத்திறனாளியின் உடல் நிலையை மட்டும் “பலவீனம்” என்று பார்க்காமல், அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் பார்வையையும் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
A. எது பலவீனத்தின் அடையாளம்?
1. நடக்க முடியாத மனிதன் vs. ஆலயத்திற்கு வெளியே இருக்க வைத்த சமூகம்
அந்த மனிதனால் நடக்க முடியவில்லை என்பது அவரது உடல் சார்ந்த வரம்பு. ஆனால் அதைவிட முக்கியமான கேள்வி:
“அவரை ஏன் ஆலயத்தின் உள்ளே கொண்டுவரவில்லை?”
அவர் ஆலய வாசலில் இருந்தார்; ஆலயத்தின் வாழ்க்கையில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலையில் இருந்தார். எனவே, பலவீனம் அவருடைய கால்களில் மட்டும் இல்லை; அவரை வெளியே வைத்த சமூக அமைப்பிலும் இருந்தது.
மாற்றுத்திறன் என்பது ஒருவரின் உடலில் மட்டும் இருப்பதல்ல; அவரைச் சுற்றியுள்ள தடைகளும் அவருடைய வாழ்க்கையைப் பாதிக்கின்றன.
2. உதவி பெறும் மனிதன் vs. பிச்சை எடுக்க வைத்த சமூகம்
.அந்த மனிதன் உதவி பெற வேண்டிய நிலையில் இருந்தான். ஆனால் அவனுடைய இயலாமையைப் பயன்படுத்தி, அவனை பிச்சை எடுக்கும் நிலையில் வைத்திருந்தது சமூகம்.
அவனுடைய தேவையைப் போக்குவதற்குப் பதிலாக, அவனுடைய இயலாமையே பிறருக்கு ஆதாயம் தரும் ஒரு வழியாக மாறிவிட்டது. அதாவது, “அவனுக்கு உதவி தேவைப்பட்டது; ஆனால் அவனுடைய இயலாமையிலிருந்து சமூகம் ஆதாயம் பெற்றது.”
B. எது பலத்தின் அடையாளம்?
1. உதவி செய்தல் vs. உடனிருத்தல்
உதவி செய்வது நல்லது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் “உதவி செய்ய வேண்டியவர்கள்” என்ற அணுகுமுறை மட்டும் போதாது.
பேதுருவும் யோவானும் அவனைப் பார்த்தார்கள். அவனுடன் தொடர்பு கொண்டார்கள். அவனுடைய வாழ்க்கையில் உடனிருந்தார்கள்.
உதவி செய்வது:
“உனக்காக நான் செய்கிறேன்.”
உடனிருப்பது:
“உன்னுடன் நான் இருக்கிறேன்.”
மாற்றுத்திறனாளிகளுக்கு இரக்கத்தை மட்டும் அல்லாமல் உறவு, உரிமை, மரியாதை, பங்கேற்பு ஆகியவற்றையும் வழங்குவது உண்மையான பலத்தின் அடையாளம்.
2. அற்புதம் செய்தல் vs. அங்கீகாரம் கொடுத்தல்
அப்போஸ்தலர் 3-ல் நடந்தது ஒரு பெரிய அற்புதம். ஆனால் அந்த அற்புதத்தின் நோக்கம் அவனை வெறுமனே “நடக்கச் செய்வது” மட்டுமல்ல.
அவன் எழுந்தான். நடந்தான். குதித்தான். கடவுளைத் துதித்தான். ஆலயத்திற்குள் சென்றான் (அப். 3:8).
இதில் ஒரு முக்கியமான செய்தி உள்ளது:
அற்புதம் அவனுடைய உடலை மாற்றியது;
அங்கீகாரம் அவனுடைய இடத்தை மாற்றியது.
அவன் இனி ஆலய வாசலில் கிடக்கும் ஒருவன் அல்ல.
அவன் ஆலயத்திற்குள் வந்து கடவுளைத் துதிக்கும் ஒருவன்.
அதனால், மாற்றுத்திறனாளிகளுக்கான உண்மையான “பலத்தின்” அடையாளம் வெறும் அற்புதங்களைச் செய்வதில் மட்டும் இல்லை.
அவர்களை ஏற்றுக்கொள்வது,
அவர்களுக்கு இடம் கொடுப்பது,
அவர்களின் திறமைகளை அங்கீகரிப்பது,
திருச்சபையின் வாழ்க்கையில் முழுமையாகப் பங்கேற்கச் செய்வது — இவையும் பலத்தின் அடையாளங்களே.
நிறைவாக...
பலவீனமானவர் யார்?
நடக்க முடியாதவரா?
அல்லது நடக்க முடியாதவருக்கு வழி ஏற்படுத்தாத சமூகமா?
பலமானவர் யார்?
அற்புதம் செய்பவரா?
அல்லது ஒதுக்கப்பட்டவரைத் தன்னுடன் நிற்கச் செய்பவரா?
“மாற்றுத்திறனாளிகளின் பலவீனத்தை மட்டும் பார்க்காத திருச்சபையாக, அவர்களுக்குள் இருக்கும் பலத்தையும் திறமையையும் காணும் திருச்சபையாக மாறுவோம்.”
அப்போஸ்தலர் 3 நமக்கு சொல்லும் செய்தி:
“எழுந்து நட” என்பது உடலுக்கான அழைப்பு மட்டுமல்ல;
“எங்களுடன் வா” என்பது சமூகத்திற்கான அழைப்பு.
கற்றுக்கொள்ளும் பாடம்
1. தடைகளை அகற்றுதல் (Removing the Barriers)
2. சமத்துவத்தை வழங்குதல் (Giving Equality)
3. சுயமரியாதையோடு இணைத்துக் கொள்ளுதல் (Belonging with Dignity)
மேயேகோ
9486810915

0 Comments