Ad Code

நாட்டார்பட்டி ஆலய பிரச்னை: ஜெபத்துடன் செயல்படுவோம் Nattarpatti Church Issues


திப்பணம்பட்டியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட தேவாலயத்தை 4 வாரங்களுக்குள் இடித்து அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டார் பட்டி கிராமம் இங்கு சர்வே எண் 264/1 ல் 10 சென்ட் நிலத்தில் தென்னிந்திய திருச்சபை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு சமுதாய கூடம் கட்டுவதற்காக பஞ்சாயத்தில் அனுமதி பெற்று சமுதாய நல கூடத்திற்கு பதிலாக சம்பந்தப்பட்ட சர்வே எண் 264/1 10 சென்ட் நிலத்தில் தேவாலயம் கட்டப்பட்டது தேவாலயம் மற்றும் 100 அடி கோபுரம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகிருஷ்ண பிரபு என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த 2024 பிப்ரவரி 20ஆம் தேதி அன்று நாட்டார் பட்டி கிராமத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட தேவாலய கட்டிடத்தை இடிப்பதற்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தென்காசி மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றாததால்

மனுதாரர் அவரது வழக்கறிஞர் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததின் பெயரில் தென்காசி மாவட்ட ஆட்சியர் தென்காசி கோட்டாட்சியர் மற்றும் தென்காசி காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட தேவாலய கட்டிடம் குறித்த விபரங்களை அறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட தேவாலயம் அனுமதியின்றி கட்டப்பட்டதாகவும் கட்டிடம் கட்டப்பட்டு முடிவடைந்த நாளிலிருந்து இன்று வரை வழிபாடு நடைபெற்று வருகிறது என்றும் 28 5 2024 அன்று தல பார்வை செய்யப் பட்டதாக மேற்படி இடத்திற்கு திருநெல்வேலி டயோசீசன் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படவில்லை என்றும் மேற்படி இடத்தில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க பரிந்துரை செய்ய மார்க்கம் இல்லை என மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். ஆய்வு அறிக்கையை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் 25 6 2024 அன்று நாட்டார் பட்டி கிராமத்தில் அனுமதி இல்லாமல் தேவாலயம் அதன் கோபுரமும் கட்டப் பட்டுள்ளதால் மேற்படி கட்டிடத்தை தமிழ்நாடு ஊராட்சி கட்டிட விதிகள் படி அவற்றை இடிக்க நடவடிக்கை

நடவடிக்கை எடுக்குமாறு கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார் மேலும் தேவாலய கட்டிடத்தை அகற்றும் போது சட்ட ஒழுங்கினை பராமரித்திட உரிய நடவடிக்கை எடுத்திட தென்காசி வருவாய் கோட்டாட்சியரும் மற்றும் இது தொடர்பாக உரிய பாதுகாப்பு வழங்கி தென்காசி காவல் கண்காணிப்பாளரும் கேட்டுக்கொள்ளப் படுவதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் 25 6 2024 தேதிய உத்தரவின் பெயரில் திருநெல்வேலி டயோசீசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் WP 15380/2024 ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி மனுவானது 1-10-26 ல் தள்ளுபடி செய்யப்பட்டு அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டுமானத்தை இடித்து அகற்றி ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட சமுதாயக்கூடத்தை போன்று மாற்றி அமைக்க வேண்டும். இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் எம். தண்ட பாணி, எம்.தீப் குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நாட்டார்பட்டி ஆலயப் பிரச்னை தொடர்பாக எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ள, வேதாகமத்தில் எருசலேம் மதில்களைக் கட்டுவதில் தடைகளும் எதிர்ப்புகளும் வந்தபோது, "எங்கள் இறைவனை நோக்கி ஜெபம் பண்ணி, இரவும் பகலும் விழித்திருந்து காவலாளரை வைத்தோம்" (நெகேமியா 4:9) என்று நெகேமியா காட்டிய மாதிரியின்படி, நாமும் உணர்ச்சிவசப்படாமல் விசுவாசத்தோடும் ஜெபத்தோடும், அதேவேளையில் விவேகத்துடனும் சட்டரீதியான வழிகாட்டல்களைப் பின்பற்றியும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments