திருமறையில் யார் இவர் யாரோ? - 135
பொர்த்துனாத்து: குறைவை நிறைவு செய்யும் ஊழியர்கள்
1. பெயர்:
பொர்த்துனாத்து • Fortunatus
2. அர்த்தம்:
பாக்கியவான், மகிழ்ச்சியானவன்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
4. வரலாற்றுக் குறிப்புகள்
• கொரிந்து சபையைச் சார்ந்தவர்: பொர்த்துனாத்து என்பவர் ஆதி திருச்சபையின் காலத்தில் கொரிந்து நகரத்தைச் சேர்ந்த ஒரு விசுவாசி அல்லது தலைவராக இருந்திருக்கலாம்.
• பவுலுக்கு உதவியவர்: கொரிந்து சபையில் இருந்த குழப்பங்கள், பிரிவினைகள் மற்றும் விசுவாசிகளின் கேள்விகள் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலுக்குத் தெரிவிக்கவும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் ஸ்தேவான் மற்றும் அகாயு ஆகியோருடன் பவுல் இருந்த இடத்திற்கு (எபேசு நகருக்கு)ச் சென்றவர்களில் இவரும் ஒருவர்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இவர்கள் பவுலைச் சந்தித்து கொரிந்து சபையின் அன்பையும் நிலைமையையும் எடுத்துரைப்பதன் மூலம் அப்போஸ்தலரின் மனதுக்கு ஆறுதலாகவும், சபைகளின் குறைவுகளை நிவர்த்தி செய்பவர்களாகவும் இவர்கள் விளங்கினார்கள். ஒரு சபையிலோ அல்லது தலைவரிடத்திலோ உள்ள குறைகளையும், தேவைகளையும் அறிந்து அவற்றை அன்போடு நிவர்த்தி செய்பவர்களாக விசுவாசிகள் இருக்க வேண்டும் என்பதை பொர்த்துனாத்துவின் வாழ்க்கை நமக்குப் கற்பிக்கிறது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil
Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

0 Comments