Ad Code

லூகி • Lucius Paul's kinsman

திருமறையில் யார் இவர் யாரோ? - 133
லூகி: நம்பகமான உடன் உழைப்பாளர் (Reliable Team Player)

1. பெயர்:  
லூகி • Lucius Paul's kinsman 

2. அர்த்தம்: 
ஒளிமயமானவர்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16.21
அப்போஸ்தலனாகிய பவுல் இவரை "என் இனத்தான்" என்று குறிப்பிடுகிறார்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• பவுலின் இனத்தார் (Kinsman) என்பதால் இவர் பவுலைப் போல யூதக் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், பவுலின் உறவினராகவோ அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த விசுவாசியாகவோ இருந்திருக்கலாம் என்றும் அறிய முடிகிறது.
• கொரிந்துவில் பவுலோடு இருந்தவர்: பவுல் கொரிந்து நகரிலிருந்து ரோமருக்கு நிருபம் எழுதிய காலத்தில், லூகியுவும் அவருடன் இணைந்து ஊழியத்தில் பங்குபெற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
• கொரிந்துவின் துறைமுகப் பகுதியான கெங்கிரேயா (Cenchreae) சபையின் ஆயராக நியமிக்கப்பட்டார் என்று திருச்சபை மரபுகள் குறிப்பிடுகின்றன.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பவுல் இவரைத் வெறும் உறவினராக மட்டுமல்லாமல், "என் சகவேலையாள்" (Fellow worker / Co-worker) என்று சாட்சி கூறுகிறார். பெரிய அப்போஸ்தலனாகிய பவுலோடு இணைந்து, எந்தவித விளம்பரமும் இன்றி சுவிசேஷப் பணியைத் தோளோடு தோள் நின்று தாங்கியவர். நமது தகுதியை விட நமது நம்பகத்தன்மையும் உடன் உழைக்கும் மனப்பான்மையுமே ஊழியத்தில் முக்கியமானது.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

Post a Comment

0 Comments