Ad Code

அடக்கம் செய்யும் ஆராதனை முறைமை


Funeral Service
அடக்கம் செய்யும் ஆராதனை முறைமை

          
                  (வீட்டில் வைத்து)
          
தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
     ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
     அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் - தேவ

சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
     வானபரன் என்னோடிருப்பார்
     வளை தடியும் கோலுமே தேற்றும் - தேவ

(சொந்த வார்த்தைகளில் ஜெபிக்கலாம்)

            (ஆலயத்தில் வைத்து)

முகவுரை வசனங்கள்

இயேசு சொன்னார்: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11. 25, 26?

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.  அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும். (யோபு 19:25 - 27)

உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.  (1 தீமோத்தேயு 6:7)

கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். (யோபு 1.21)

[தேவையாயின் - ஆரம்ப ஜெபம் & பாடல்}

திருமறை பகுதி: 1 கொரிந்தியர் 15. 50 - 58

{தேவையாயின் - இறைவார்த்தை பகிர்வு
அப்போஸ்தல விசுவாச பிரமாணம்}

கர்த்தருடைய ஜெபம்
பரமண்டலங்களிலிருக்கிற ........ ஆமென்.
(சொந்த வார்த்தைகளில் ஜெபிக்கலாம்)

           (கல்லறைத் தோட்டத்தில் வைத்து)

ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான், அவன் பூவைப் போல பூத்து அறுப்புண்டு போகிறான்; நிழலைப் போல நிலை நிற்காமல் ஓடிப்போகிறான்.

ஜீவனோடிருக்கும் போதே சாவுக்குட்பட்டிருக்கிறோம், எங்கள் பாவங்களினிமித்தம் நியாயப்படி கோபங்கொண்டிருக்கிற கர்த்தாவே, தேவரீரிடத்தில் அன்றி, யாரிடத்தில் சகாயம் தேடுவோம்.

பரிசுத்தமுள்ள தேவனே, சர்வ வல்லமை பொருந்திய கர்த்தாவே, இரக்கம் நிறைந்த இரட்சகரே, நித்திய மரணத்தின் கொடிய வேதனைகளுக்கு எங்களை ஒப்புக்கொடாதேயும்.

கர்த்தாவே, எங்கள் இருதயத்தின் இரகசியங்களை அறிந்திருக்கிறீர்; எங்கள் ஜெபங்களுக்கு இரக்கமுள்ள உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும் . பரிசுத்தமுள்ள கர்த்தாவே, எங்களுக்கு இரங்கிப் பொருத்தருளும் . சர்வ வல்லமையுள்ள தேவனே, பரிசுத்தமும் இரக்கமுமுள்ள இரட்சகரே , நீதியுள்ள நித்திய நியாயாதிபதியே, எங்கள் அந்திய காலத்தில் நேரிடும் எந்த வேதனைகளினாலும் நாங்கள் உம்மை விட்டுப் பிரியாத படி செய்தருளும்.


மரித்துப் போன நம்முடைய பிரிய சகோதரரா(ரியா)கிய .............................. இவருடைய ஆத்துமாவைச் சர்வ வல்லமையுள்ள கடவுள் மிகுந்த இரக்கத்தினால, தம்மிடத்தில் சேர்த்துக்கொள்ளச் சித்தமானபடியினால், எல்லாவற்றையும் தமக்கு கீழ்படுத்தத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நித்திய ஜீவனை அடைய உயிர்த்தெழுதல் உண்டாகும் என்று உறுதியாய் நம்பி நாம் இவருடைய சரீரத்தை ⚰️ மண்ணுக்கு மண்ணாயும், சாம்பலுக்கு சாம்பலாயும், புழுதிக்கு புழுதியாயும், பூமிக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.


அப்பொழுது சொல்ல அல்லது பாட வேண்டியதாவது:

பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள் என்றெமுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் என்று ஆவியானவர் திருவுளம்பற்றுகிறார்.

ஜெபம் பண்ணக்கடவோம்.

கர்த்தாவே எங்களுக்கு இரங்கும்
            கிறிஸ்துவே எங்களுக்கு இரங்கும்
கர்த்தாவே எங்களுக்கு இரங்கும்

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டத்திலே செய்யப்படுகிறது போல,பூமியிலேயும் செய்யப்படுவதாக.
அன்றன்றுள்ள எங்கள் அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும்.எங்களுக்கு விரோதமாய்க் குற்றஞ்செயல்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல, எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ஆமென்.

(ஏதாவது இரண்டு ஜெபங்கள் போதுமானது) 

சர்வ வல்லமையுள்ள தேவனே, கர்த்தருக்குள் மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சரீரமாகிய சுமைநீங்கி விடுதலையடைந்து, இம்மையை விட்டுப்போய் தேவரீரிடத்தில் ஆனந்த சந்தோஷம் அனுபவித்து வாழுகிறது. பாவம் நிறைந்த இவ்வுலகத்திலுள்ள துன்பங்களின்று எங்கள் சகோதரரா(ரியா)கிய இவனை இரட்சிக்க சித்தமானதற்காக தேவரீருக்கு முழுமனதோடே ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். தேவரீர் தெரிந்து கொண்டவர்களின் தொகையைச் சீக்கிரத்தில் நிறைவாக்கவும உம்முடைய ராஜ்யத்தைத் தீவிரமாய் வருவிக்கவும் கிருபை கூர்ந்து கட்டளையிட்டருளும். உம்முடைய
பரிசுத்த நாமத்தைப் பற்றும் மெய் விசுவாசமுள்ளவர்களாய் மரித்த அனைவரோடுங்கூட, நாங்களும் என்றுமுள்ள உமது நித்திய மகிமையிலே சரீரத்திலும், ஆத்துமத்திலும் குறைவின்றிச் சம்பூரணம் அடைந்தவர்களாய் ஆனந்தத்தை அனுபவிக்கும்படி எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்

                           அல்லது
                          
இரக்கமுள்ள இறைவா, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே, அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். அவரிடத்தில் விசுவாமாயிருக்கிறவன்
மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருக்கையில் அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் ஒருக்காலும் மரிக்கமாட்டேன். அவருக்குள் நித்திரையடைந்தவர்களைக் குறித்து நம்பிக்கையற்றவர்களைப் போலத் துக்கப்படாதபடி, தம்முடைய அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலைக் கொண்டு எங்களுக்கு கற்பித்திருக்கிறாரே.
பிதாவே, எங்கள் சகோதரரா(ரியா)கிய இவர் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்து
இளைப்பாறுகிறார் என்று நாங்கள் நம்புகிறது போல, இம்மையை விட்டுப் போகும் போது நாங்களும் அவரிடத்தில் சேர்ந்து இளைப்பாறவும், மரித்தோர் உயிர்த்தெழும்பும் கடைசி நாளிலே உம்முடைய சமுகத்தில் பிரியமுள்ளவர்களாய்க் காணப்படவும், உம்முடைய பிரிய குமாரன் உம்மிடத்தில் அன்பாயும் பயபக்தியாயுமிருக்கிற யாவரையும் நோக்கி: "வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" என்று அருளிச்செய்யும் ஆசீர்வாதத்தைப் பெற்று அனுபவிக்கவும், நீதியாகிய ஜீவனை அடைய, பாவமாகிய மரணத்தினின்று எங்களை உயிர்ப்பித்தருள வேண்டுமென்று பணிவாய் வேண்டிக்கொள்ளுகிறோம். இரக்கமுள்ள பிதாவே எங்கள் மத்தியஸ்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் இதைக்கட்டளையிட்டருளும். ஆமென


சர்வ வல்லமையுள்ள தேவனே, சகல இரக்கங்களின் பிதாவே, எல்லா ஆறுதலையும் அருளுகிறவரே, துக்கப்படுகிறவர்களுக்கு உமது கிருபையை அருளிச் செய்து அவர்கள் தங்கள் கவலைகளையெல்லாம் உமது பேரில் வைத்து உமது அன்பை அறிந்து ஆறுதலடையக் கடாட்சித்தருள வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக் கொள்கிறோம்.ஆமென்.

                 அல்லது
                
பரம பிதாவே, உண்மையான விசுவாசத்தையும் உறுதியான நம்பிக்கையையம் உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீரே; நாங்கள் மெய்யாகவே பரிசுத்தவான்களின் ஐக்கியமும், பாவமன்னிப்பும்,சரீரம் உயிர்த்தெழுதலும் உண்டென்று விசுவாசத்து நம்பிக்கையுள்ளவர்களைப் போல் ஜீவிக்க எங்களுக்கச் சகாயஞ்செய்து எங்கள் ஜீவகாலமெல்லாம் இந்த விசுவாசத்தையும், நல் ஆறுதலின் நம்பிக்கையையும் எங்களில் உறுதிப்படுத்தி நிலைநிறுத்தியருள வேண்டுமென்று உமது குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பினிமித்தம் வேண்டிக்கோள்ளுகிறோம். ஆமென்

ஆசீர்வாதம்
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும்,
தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஜக்கியமும் உங்களனைவரோடுங் கூட எப்போதைக்கும் இருப்பதாக. ஆமென்

முடிவு கவி

நிழல் போன்ற வாழ்விலே
கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில்,
நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே......   ஆமென்.

                அல்லது
உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்.
                                                                       
ஆ அப்பாக்கிய மாட்சி நாளில்
மாண்டோர் உயிர்த்தெழுவார்
பெற்றோர் பிள்ளை சுற்றத்தாரும்
கூடு வார்.
    
நின் சிலுவை பற்றும் எம்மை
சாவில் நியாயத் தீர்ப்பிலும்
காத்து மா அக்கூட்டம் சேரும்
இயேசு வே.                  ஆமென்.


துணை நின்ற நூல்கள்

Common Prayer Book in Tamil

Post a Comment

0 Comments