பரிசுத்த வேதாகமம் தூய ஆவியானவரின் உதவியால் இறை மனிதர்களின் தியாகத்தால் எழுதப்பட்டது. சாதாரண மக்கள் வேதாகமத்தை வைத்திருப்பது தவறு என்றும், தண்டனைக்குரிய குற்றம் என்றும், சட்டம் இருந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனின் கரங்களில் வேதாகமம் இருக்க வேண்டும் என்று பாடுபட்டவர் தான் வில்லியம் டிண்டல் (William Tyndale 1494 - 1536). இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டு வேதாகமம் தான் ஆங்கிலத்தில் முதன் முதலில் பிரின்டிங் செய்யப்பட முதல் பைபிள் ஆகும்.
இங்கிலாந்து அரசு அவரை கள்ளப்போதகர் என்று தீர்ப்பிட்டு அவர் மொழிபெயர்த்த வேத வசனங்களை தீயிட்டு கொழுத்தியது.16 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். இறுதியில் 06.10.1536 ஆம் நாள் கம்பத்தில் கட்டி வைத்து கொழுத்தினார்கள். அத்தீயின் மத்தியிலும், "ஆண்டவரே இங்கிலாந்து அரசனின் கண்களைத் திறந்தருளும்" என்று மன்றாடினார். டிண்டேலில் இறுதி ஜெபத்துக்குத் கடவுள் பதிலளித்தார். இங்கிலாந்தில் கிறிஸ்தவம் மலர்ந்து. ஆங்கிலத்தில் வேதாகம மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, கிறிஸ்து உலகமெங்கும் அறிவிக்கப்பட்டார்.
இன்றைக்கு நாம் எப்படி திருமறையைப் பயன்படுத்துகிறோம்? அதை மற்றவர்களுக்குக் கொடுக்க முன்வருகிறோமா? வேதம் சொல்லுகிறது: (எபிரேயர் 4.12) கடவுளுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
இறைவாக்கு உங்களில் பெருகுவதாக.
0 Comments