கிளாடிஸ் மே ஆலிவார்ட் (Gladys May Aylward (24.02.1902 – 03.011970) லண்டன் நகரத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்தாள். ஒரு முறை அவர் ஆலயத்திற்கு சென்ற போது, அங்குள்ள போதகரும், இவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கடவுளின் அழைப்பை தட்டிக்கழித்து கொண்டிருந்த கிளாடிஸிடம் போதகர் சொன்னார்: "நீ ஆண்டவருக்கு தேவை" என்றார். மீண்டும் அவர் சொன்னார்:' "உனக்கு ஒரு வேளை கடவுள் தேவையில்லாமல் இருக்கலாம்; ஆனால் அவருக்கு நீ தேவை" என்று வலியுறுத்திக் கூறிக் கொண்டிருந்தார்.
கிளாடிஸ் தான் ஜெபிக்கும் போதும் கடவுளின் அழைப்பை உணர்ந்து ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணித்தாள். வேலைக்காரியாக பணிபுரிந்த கிளாடிஸ் சீனா தேசத்துக்கு சுவிசேஷத்தை எடுத்துச் சென்றாள். தனது பாடும் திறமை, ஜெபிப்பதில் வாஞ்சை, ஊழிய ஆர்வம் போன்ற உயரிய குணங்களை மூலதானமாக கொண்டு சீனா சென்று கிறிஸ்துவை அறிவித்தாள். சில சவால் விடக்கூடிய புத்தகங்களை எழுதியுள்ளார். லண்டன் நகரப் பணிப்பெண்ணாய் இருந்தவரும், படிப்பறிவில்லாதவருமான கிளாடிஸைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்யும் போது உன்னாலும் பெரிய காரியங்களைச் செய்ய முடியுமல்லவா?
அப்போஸ்தலனாகிய பவுலடிகளார் எழுதியிருக்கிறார்: (2 கொரிந்தியர் 3.5) எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி கடவுளால் உண்டாயிருக்கிறது. தகுதியில்லை என்று சாக்குப் போக்கு சொல்லாமல், ஆண்டவரே என்னை தகுதிபடுத்தும் என்று ஜெபித்து இறைப் பணியாளராக அர்ப்பணிப்போமா?
0 Comments