Ad Code

குறுகியகாலம் எனினும் செய்து முடி

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டேவிட் பிரெய்னார்டு (David Brainerd 20.04.1718 - 09.10.1747), 9 வயதில் தந்தையையும், 14 வயதில் தாயையும் இழந்தவர். தீய நண்பர்களிடம் சேர்ந்து சுற்றிய இவர் 21 ஆம் வயதில் மனந்திரும்பினார். கல்லூரியில் படிப்பை இறுதியாண்டில் நிறுத்தி விட்டு கடவுளின் அழைப்பை ஏற்று ஊழியத்துக்கு வந்தார். நியூயார்க் போதகர் ஒருவர் கொடுத்த தகவல்படி செவ்விந்தியர்கள் (அமெரிக்க - இந்தியர்கள்) மத்தியில் மிஷனரியாக சென்றார்.

அநாகரீகமான ஆதிவாசிகள், மூடநம்பிக்கையால் கட்டப்பட்டிருந்தவர்களான  செவ்விந்தியர்கள் ஒரு நாள் டேவிட்டைக் கொல்ல கூர்மையான கத்தியோடு ஓடிவந்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி: டேவிட் முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்துக்கு அருகே கொடிய விஷப்பாம்பு நின்று கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் அது சுருண்டு திரும்பிக் போய்விட்டது. இது செவ்விந்தியர் கூட்டத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்து. இவன் ஒரு தேவமனிதன் என்று கொண்டாடினார்கள்.  செவ்விந்தியர்களுக்கு இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்தார். அந்த இன மக்கள் மத்தியில் கிறிஸ்துவின் சிலுவை கொடி பறந்தது. ஆனால் டேவிட் பிரெய்னார்டு தனது 29 ஆம் வயதில் கொடிய வியாதியினால் மரித்தார். ஆனால் இன்றும் பேசப்படுகின்றார்.


பிலிப்பியர் 1.20 இல், "நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்" என்று பரிசுத்த பவுல் தமது ஊழிய அனுவத்தை பகிர்ந்து கொள்கிறார். மிகக்குறுகிய வாழ்வே ஆனாலும், அது முழுவதும் கடவுளுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு!

Post a Comment

0 Comments