திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தீவிரமான வைணவ பக்தரும், கிறிஸ்தவர்களை அறவே வெறுப்பவருமான, தமிழ்பண்டிதர் கிருஷ்ணன் வேதாகம கல்லூரி ஒன்றில் பணியில் அமர்ந்தார். ஒருநாள் அவருடன் மிகவும் அன்புடன் செயல்படும் மிஷனரி ஹகஸ்டபிள் புதிய ஏற்பாட்டை கிருஷ்ணனுக்கு கொடுத்தார். அன்று முதல் தன்னுடைய வேலையை விட்டு விட்டார்.
ஆனால் அவரை விடாத கடவுள் அவரோடு இடைப்பட்டார். அந்த மிஷனெரியின் அன்பு அவரை சிந்திக்க வைத்தது. அவரது நண்பர்களில் ஒருவர் தனக்கோடி ராஜீ என்பவர் கிறிஸ்துவை குறித்து தெளிவாய் அவருக்கு அறிவித்தார். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். பேராயர் சார்ஜென்ட் , உவாக்கர், ஏமிகார்மைக்கேல் அம்மையார் ஆகிய மாபெரும் மிஷனெரிகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். இரட்சண்ய யாத்திரிகம், இரட்சண்ய மனோகரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். அவரது பெயருக்கு முன்னால் வரும் HA என்பது ஹென்ரி ஆல்பிரட் என்று அவர் மாற்றிக் கொண்ட பெயராகும்.
வேதாகமம் கொடுத்ததற்காக வேலையை விட்டவரை வேதாகமம் குறித்து புத்தகங்கள் எழுதும் வேலையையும், மொழி கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்ய வைத்த கடவுளின் செயல்பாடு எத்துணை சிறப்பானது! வேத வசனம் சொல்லுகிறது: (நீதிமொழிகள் 21.1) "ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்."
0 Comments