வேதப்புத்தகத்தையும், கிறிஸ்தவர்களையும் அழிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்ட ரோமசக்கரவர்த்தி யோக்ளிசியன் கி.பி303 இல் கிறிஸ்தவர்களையும், வேத ஆவணங்களையும் அழிக்க அரசு ஆணை வெளியிட்டான். கிறிஸ்தவர்களை அழிக்க ரோம சாம்ராஜ்ஜியமே சுறுசுறுப்புடன் செயல்பட்டது. இராணுவம் வீடு. வீடாகச் சென்று கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தது மட்டுமல்லாமல் வேதாகமத்தின் சிறு உறுப்புகளைக்கூட எரித்து சாம்பலாக்கியது. வேதாகமத்தை முற்றிலும் அழித்து விட்டதாக மன்னன் பெருமிதம் கொண்டார்.
நடந்தது என்ன தெரியுமா? அவனுக்குப்பின் அரியணைக்கு வந்த கான்ஸ்டன்டைன் என்ற சக்கரவர்த்தி தனது போர்வெற்றிக்குப் பின், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அறிவிப்பவனாய் காணப்பட்டான். அவன் வேதம் மற்றும் அது சார்ந்த நிருபங்களை அறிந்து கொள்ள விரும்பியதால், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டான். வேதாகமப் பிரதிகளை தேடிக் கொண்டு வருபவர்களுக்கு அரச பொற்களஞ்சியத்திலிருந்து வெகுமதி அளிக்கப்படும். என்ன ஆச்சரியம்! அறிவிப்பைப் பெற்ற 24 மணிநேரத்திற்கள் ரோம சாம்ராஜ்ய எல்லைக்குள் இருந்தே 50 வேதாகமப் பிரதிகள் கொண்டு வரப்பட்டன.
இறை வார்த்தைகளை யாராலும் தடை செய்ய முடியாது. தலைமுறை தலைமுறையாக பேசுகின்ற உயிருள்ள புஸ்தகம். இயேசு கிறிஸ்து சொன்னார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை (மத்தேயு 24.35).
0 Comments