லிசினு என்ற பேரரசர் காலத்தில் ஆர்மீனியாவின் ஆளுநர் ஒரு கட்டளை பிறப்பித்தான். "துணிச்சல் இருந்தால் கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் என் முன் வந்து நில்லுங்கள்" என்று அறிவித்தான். வந்து நின்றவர்களிடம் கொதித்தெழுந்த ஆளுநர் தனது தெய்வங்களுக்கு பலி செலுத்தும்படி கட்டளையிட்டான். அப்போது வந்து நின்ற 40 பேரும், "நாங்கள் கிறிஸ்தவர்கள், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கும் ஆராதனை செய்யமாட்டோம்" என்று சத்தமாக கூறினார்கள்.
40 பேருக்கும் சாட்டையடிகள் சரீரம் கிழிந்து போகும்வரை கொடுக்கப்பட்டது. உறைந்த பனிக்கட்டிகள் கிடக்கும் குளத்தில் 40 பேரும் நிர்வாணமாக படுக்க வைக்கப்பட்டனர். அருகிலேயே வெந்நீர் நிரப்பிவைத்தனர். "இயேசுவை மறுதலிப்போர் வெ்ளியே வந்து இந்த வெந்நீரில் குளிக்கலாம்; விடுதலையும் அடையலாம்" என்றார். ஆனால் ஒருவர் கூட மறுதலிக்கவில்லை ஆளுநரின் கட்டளைப்படி 40 பேரையும் ஒன்றாக தீ வைத்துக் கொளுத்தினார்கள். இது கி.பி.320-ம்ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவம்.
இந்த துணிச்சல் உங்களிடத்தில் காணப்படுகின்றதா?
இயேசுவுக்காக முன் வருவோர் எத்தனை பேர்?
இன்னல்கள் வரும்போது கடைசி வரை நிலை நிற்க தயாரா?
இயேசு சொன்னார்:
"என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்" (லூக்கா 9.26).
0 Comments