மாபெரும் தேர் ஊர்வலம். தேர்ச்சக்கரங்களில் அநேகர் தாங்களாகவே முன் வந்து விமுந்து துடிதுடித்து இறந்து போனார்கள். இப்படிச் செய்வதால் மோட்சத்தை அடைந்து விடுவதாக நம்பினார்கள். இந்த மூடநம்பிக்கை கண்டு துடிதுடித்தார் இங்கிலாந்து நாட்டிலிருந்து மிஷனெரியாக இந்தியா வந்த 24 வயது ஹென்றி மார்ட்டின் அவர்கள்,
கிறிஸ்துவாலேயல்லாமல் வேறு எவராலும் இவர்களது அறியாமையை நீக்கி, மாற்றங்களை ஏற்படுத்த கூடாது என்று எண்ணினார்.
கிறிஸ்துவை இந்த மூடநம்பிக்கையில் உள்ள மக்களுக்கு அறிவிக்க வேதாகமத்தை அவர்கள் தாய்மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்று கருதி ஹிந்தி, வங்காளம், பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். வேதாகமத்தை மொழி பெயர்த்தார். பெர்சியா சென்று வேதாகமத்தை அரேபிய மொழியில் வெளியிட்டார். ஓய்வு இல்லாமல் ஊழியம் செய்ததால் உடல்நிலை அதிகமாக பாதிக்கப்பட்டு தனது 31 ஆம் வயதிலேயே கடவுளிடம் சென்றார்.
அப்போஸ்தலராகிய பவுலடிகளார் சொல்கிறார்,
"எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது" (ரோமர் 9:1) எதற்காக அவர் துக்கப்படுகிறார். தனது சொந்த மக்கள் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்று தவிக்கிறார். இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்? நம்முடைய செயல்பாடுகள் எப்படி உள்ளன? அழிந்துபோய் கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காய் என்ன செய்கிறோம்? சிந்திப்போம்.... செயல்படுவோம்...
0 Comments