தன் இளவயதில் மருத்துவப் படிப்பை முடித்த ஜெனி V. ஹக்ஸ் என்ற பெண்மணி சைனாவுக்கு சென்று கடவுளுக்காக மிஷனெரி பணி செய்வதையே தன் விருப்பமாக கொண்டிருந்தார். ஜெனியின் தந்தை சபை ஊழியராக இருந்த மெதடிஸ்ட் சபையின் மூலமாக சைனா செல்ல ஜெனி V. ஹக்ஸ்-க்கு கிடைத்து, சைனா சென்றார்.
அங்கு மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மேரி ஸ்டோன் என்பவரை சந்தித்தார். ஜெனி வெகு நாள் மேரியுடன் இருந்து அநேக காரியங்களை கற்றுக்கொண்டார். நற்செய்தி பணியை மிக ஆர்வமுடன் செய்தார். ஜெனி V.ஹக்ஸ் சைனாவில் Bethel Mission என்ற அமைப்பை உருவாக்கினார் . அது மாத்திரமல்ல, Primary & Secondary School மற்றும் Hospital என்று ஒவ்வொன்றாக நிறுவ ஆரம்பித்தார். Bethel Bible School ஒன்றும் நிறுவினார்.
ஜெனி Chinese Heart- Throbs என்ற புத்தகத்தை எழுதினார். ஜெனிக்கு பாடுவது என்பது மிகவும் பிடிக்கும் என்பதால் இசைப்பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது. சுவிசேஷ ஸ்தாபனம் என்ற மிஷனெரி ஸ்தாபனத்தை ஆரம்பித்து அநேக சீன மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். ஜெனியின் சுவிசேஷ வாஞ்சையினிமித்தம் கடவுளின் திருப்பணியை நேர்த்தியாக செய்து திருப்தியாக வாழ்ந்தார்.
உங்களுக்கும் கடவுளுக்காக பெரிய காரியங்களை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளதா? எப்படி என்னால் செய்ய முடியுமா என நினைக்கிறீர்களா? ஜெபத்துடன் ஆரம்பியுங்கள். உங்கள் அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் இறையன்பை நற்கிரியைகளின் மூலம் வெளிப்படுத்துங்கள். உங்களால் முடிந்த ஊழியத்தை செய்யுங்கள். கடவுள் தம் சித்தப்படி நடத்துவார். வேதம் சொல்லுகிறது: சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள் (பிலிப்பியர் 1:17).
0 Comments