Ad Code

பிரசங்கமா? படிப்பா?



மிகவும் பிரசித்திப் பெற்ற பிரசங்கியாராக விளங்கியவர் பில்லி கிரஹாம் அவர்களிடம் பண்டிதர் ஒருவர் கேட்டார், 

             "திருப்பவும் உங்களுக்கு வாழ்க்கையைத் துவங்க ஒர் வாய்ப்பளிக்கப்பட்டால் அதில் என்ன செய்வீர்கள்?"

பில்லி கிரஹாம் பிரதியுத்திரமாக சொன்னாராம்:

           "பிரசங்கிப்பதைக் குறைத்துப் படிப்பதைக் கூட்டுவேன் "

ஆராய்ந்து பார்ப்போம்.....

            இன்றைக்கு அநேக ஊழியர்கள் கேட்பதும் கிடையாது, கற்பதும் கிடையாது. எனவே தான் பிரசங்கிமார் தங்கள் தனிப்பட்ட ஜீவியத்தில் தோற்றுப் போய்விடுகிறார்கள். கடவுளுக்கென்று சாதிக்க வேண்டியவைகளைக்கூட சாதிக்க முடிவதில்லை. கேட்கவும் கற்கவும் பொறுமை இன்றியமையாதது. "என்னிடத்தில் வந்து கற்றுக் கொள்ளுங்கள்" என்று இயேசு கிறித்து சொல்லியிருக்கிறார். ஒரு போதகர் (Teacher) புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தன் வாழ்வில் முதலில் செயலாக்கம் கொடுக்க வேண்டும்.

Post a Comment

0 Comments