ஜான் நியுமேன் என்ற இறைப் பணியாளர் சொல்லுகிறார்,
"ஏதாவதொன்றைச் சொல்ல வேண்டும் என்றிருப்பவன் கள்ள பிரசங்கி;
சொல்வதற்கு ஏதாவதொன்று வைத்திருப்பவன் உண்மைப் பிரசங்கி;
தனது பிரசங்கத்தை அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் முடியாத பிரசங்கி, பொதுவாக அதை நீளப்படுத்துவான்."
ஆம் உண்மையாகவே, முதிர்ச்சியற்ற ஊழியர் பலரால் நமது பிரசங்கப்பீடங்கள் மட்ட ரகமாகியுள்ளன. மக்களை சிரிக்க வைத்து விட்டு, சிந்திக்க வைக்காவிட்டால் அது விருதா. கதைகளை வைத்து நீளமாக பேசலாம். ஆனால் இறை வெளிப்பாடு இல்லா விட்டால் விருதா. பிரசங்கம் என்பது திறமை சார்ந்தது அல்ல; படிப்பை சார்ந்தது அல்ல.
பிரசங்கிப்பவன் புதிய ஆசான் அல்லது எழுத்தாளர் அல்ல. மாறாக வேதத்தில் இருப்பதைக் கற்று போதிப்பவர். இறைப்பாதத்தில் காத்திருந்து, அவர் சத்தம் கேட்டு செயல்படுவதாகும். இந்த வளர்ச்சிக்கு பொறுமை அவசியம். வேதம் எச்சரித்து சொல்லுகிறது: "சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும்" (2 தீமோத்தேயு 4.3)
2 Comments
🙏🙏🙏
ReplyDelete👍
Delete