Ad Code

ஆயத்தம் ஊழியருக்கா? ஊழியத்துக்கா?

18 ஆம் நூற்றாண்டின் ஸ்காட்லாந்து நாட்டு பிரசித்தி பெற்ற பிரசங்கியார் ஆன்ட்ரு போனர் என்பவர் மிகவும்  வருத்தத்தோடு தனது காலத்திலிருந்த ஊழியருக்குக் கொடுத்த ஆலோசனை என்னவென்றால்,

        "ஆயத்தப்படுத்தப்பட்ட செய்தியை விட ஆயத்தப்படுத்தப்பட்ட செய்தியாளரே  முக்கியம்."
        
         "ஏராளமான ஊழியக்காரியங்களில் தலையிட்டுவிட்டு, கடவுளோடு அமர்ந்து நேரம் செலவழிக்க முடியாமல் போவதே ஊழியத்தில் ஆபத்துக்களிலெல்லாம் பெரிய ஆபத்து"

          
ஆம் இன்றைக்கு, சிலர் ஜெபிக்கக்கூட நேரமில்லை, வேதம் வாசிக்க சமயமில்லை; அந்தளவிற்கு கடவுள் என்னை பயன்படுத்துகிறார் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை. இயேசு கிறிஸ்துவிற்கு தலை சாய்க்க இடமில்லாத நிலை என்றாலும், அவர் பிதாவோடு பேசுவதை நிறுத்தவில்லையே. 
     சபை மேய்ப்பர்களுக்கு 
         கழுதையின் பொறுமையும், 
         ஆட்டுக்குட்டியின் சாந்தமும், 
         காண்டாமிருகத்தின் தோலும், 
         தூக்கணாங்குருவியின் உழைப்பும், 
         எருதின் பலமும் வேண்டும் 
என்று இறைமனிதர் ஒருவர் சொன்னார். வேதமும் சொல்லுகிறது (லூக்கா 10.38) தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள்.


Post a Comment

0 Comments