Ad Code

திருச்சபையின் திருநாட்கள் எப்போது? Feasts of the Church

கிறிஸ்தவ காலண்டர் அட்வெந்து ஞாயிறில் (நவம்பர் கடைசி ஞாயிறு அல்லது டிசம்பர் முதல் ஞாயிறு) தொடங்கி அதற்கு முந்தின சனிக்கிழமையில் முடியும். கிறிஸ்தவ காலண்டரில் வரும் திருநாட்களை, உங்கள் புரிதலுக்காக் ஜனவரி முதல் பதிவிட்டுள்ளேன்.

சிறப்பம்சம்

💫பெரும்பாலும் ஆலயங்களின் மங்கள படைப்பு  அதன் பெயருக்கான திருநாள் தேதியன்று நடைபெறும். இன்றைக்கு இந்த நல்ல திட்டம் மாறிக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

💫12 மாதங்களிலும் ஏதாவது ஒரு திருநாளாவது வந்து விடும்.

💫அன்றைய காலத்தில் ஊழியர்கள் தாங்கள் கடிதமோ, வேறு ஏதேனும் எழுதும் போது தேதி குறிப்பிடாமல் இன்ன திருநாள் என்று எழுதுவார்கள். (சான்று: 06.08.2021 க்குப் பதிலாக கிறிஸ்து மறுரூபமான திருநாள் 2021 என்று எழுதுவர்)

பயன்படுத்தும் துணி நிறம்
இரத்தச் சாட்சி என்றால் - சிவப்பு நிறம்❤️
மற்ற திருநாட்கள் - வெள்ளை நிறம்🏳️
                                    
               பட்டியல்

ஜனவரி    January
01   கிறிஸ்து விருத்த சேதன திருநாள்
06   பிரசன்ன திருநாள்
25   புனிதர் பவுலின் திருநாள்

பிப்ரவரி   February
02  புனித கன்னிமரியாள் சுத்திகரிப்பு தினம்
24 புனித மத்தியாவின்  திருநாள்

மார்ச்    March
25 புனித மரியாள் மங்களவாக்கு திருநாள்

ஏப்ரல்    April
25   புனிதர் மாற்குவின் திருநாள்

மே     May
1   புனிதர்கள் பிலிப்பு யாக்கோபு திருநாள்

ஜூன்   June
11   புனிதர் பர்னபாவின் திருநாள்
24   புனிதர் யோவான்ஸ்நானகன் திருநாள்
29   புனிதர் பேதுருவின் திருநாள்

ஜூலை  July
22   புனிதர் மகதலேனா மரியாளின்  திருநாள்
25   புனிதர் யாக்கோபுவின் திருநாள்

ஆகஸ்ட்     August
06   கிறிஸ்து மறுரூப திருநாள்
24   புனிதர் பர்தொலொமேயு திருநாள்

செப்டம்பர்      September
21  புனிதர் மத்தேயு திருநாள் 
29  மிகாவேல் முதலான சகல 
தேவதூதர்களின் திருநாள்

அக்டோபர்    October
18 புனிதர் லூக்காவின் திருநாள்
28 புனிதர்கள் சீமோன் யூதாவின் திருநாள்

நவம்பர்    November
01 சகல  பரிசுத்தவான்களின் திருநாள்
02 சகல ஆத்துமாக்களின் திருநாள்
30 புனிதர் அந்திரேயாவின் திருநாள்

டிசம்பர்    December
21   புனிதர் தோமாவின் திருநாள்
25   கிறிஸ்து பிறந்த திருநாள்
26   புனிதர் ஸ்தேவானின்  திருநாள்
27   புனிதர் யோவானின் திருநாள்
28   குற்றமில்லா பாலகரின் திருநாள்

வருடந்தோறும் தேதி மாறுபவை

கிறிஸ்து விண்ணுக்கெழுந்த திருநாள்
பரிசுத்தாவியின் திருநாள்
திரித்துவ திருநாள்

(இந்த மூன்று திருநாட்களின் தேதிகள் லெந்து காலம் முடிவதைப் பொருத்து கணக்கிடப்படும்.)


Post a Comment

2 Comments

Unknown said…
Useful one.......👍👍👍
Meyego said…
God is Good 🔥