Ad Code

இல்லை, அல்ல வேறுபாடு என்ன?

இல்லை, அல்ல, (அல்ல, அன்று மற்றும் அல்லர்) என்ற  வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் அநேகருக்குண்டு;  இவற்றிற்கு ஒரே அர்த்தம் என்பதால் இந்த குழப்பம் வரலாம். ஆனால் இவற்றின் பயன்பாட்டு இடங்கள் வேறுபடும். ஆனால், இவ்வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துவது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. சரி செய்வோம்.

1. இல்லை - அந்தப் பொருள்கள் 'குறித்த இடத்தில் இல்லை' என்று அர்த்தம்.

சான்று
              மேசை அங்கு இல்லை.
               
2. அல்ல - அந்தப் பொருள், 'நாம் எண்ணும் பொருள் அல்ல,' வேறு பொருள் என்று அர்த்தம். 

2.1 அல்ல என்பது பன்மைக்கு பயன்படுத்தும் சொல்லாகும்.

சான்று
               அவை அல்ல
               இந்த பழங்கள் அல்ல

2.2 அன்று என்பது ஒருமைக்கு பயன்படுத்தப்படும் சொல்.

சான்று 
               அது அன்று
               இந்த பழம் அன்று
              
2.3 அவர் அல்லர், அவன் அல்லன், அவள் அல்லள்,  என்று வரும்.

சான்று
                மேயேகோ அல்லன்
                மரியாள் அல்லள்
                அவர்கள் அல்லர்.
                

குறிப்புகள்

அது அல்ல, அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, என்பன தவறு. 

அது அன்று, அவை அல்ல, அவர் அல்லர் என்பன மட்டுமே சரி.

மேயேகோ எதிரே இருக்கின்றான் – அவனைப் பார்த்து, அவர் மேயேகோ அல்லன் என்று கூறுவதே பொருந்தும். அவன் மேயேகோ இல்லை என்பது தவறு.

Post a Comment

1 Comments

Anonymous said…
சிறப்பு