Ad Code

திருமேசைக்கான ஒழுங்கு | Holy Table of the Church | #100_Post


ஆசரிப்புக் கூடாரம் குறித்த நியமங்களை கடவுள் மோசேயின் மூலம் இஸ்ரவேலருக்கு கொடுத்த போது, திருமேசை குறித்தும் அவர் கற்றுக்கொடுத்தார். யாத்திராகமம் 40.04 சொல்லுகிறது: "மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைக்க வேண்டும்." ஆம், திருமேசை (Holy Table) மிகவும் பரிசுத்தமானது. நம் திருச்சபை கடைபிடிக்கும் திருமேசைக்கான ஒழுங்குமுறையை அறிந்து வைத்து கடைபிடிப்பது அவசியம்.

திருமேசை எங்கு இருக்க வேண்டும்?

💫 இன்றைக்கு பொதுவாக எல்லா ஆலயங்களிலும் திருமேசை அல்லது நற்கருணை பீடம் (communion table) மகா பரிசுத்த ஸ்தலத்தின் (ஆல்டர்) உள்ளே மையப்பகுதியில் இருக்கிறது.
St. Michael's Church
சி. எஸ். ஐ முறைமை
CSI St. Michael's Church, Achchampatti

💫 பெரும்பாலும் அனைத்து சபைகளிலும் குருவானவர் திருமேசைக்கு பின்புறம் நின்று ஆராதனை நடத்தலாம். தென்னிந்திய திருச்சபை இதற்கு அனுமதி தருகிறது.

💫 ஆனால் ஆங்கிலிக்கன், மார்த்தோமா, மெத்தடிஸ்ட் போன்ற திருச்சபைகளில் சுவரை ஒட்டி திருமேசை போடப்படும். குருவானவர் திருமேசைக்கு வடபுறமோ அல்லது முன்புறமோ நின்று நடத்த வேண்டும். இன்றைக்கும் சில CSI சபைகள் இந்த பராம்பரிய முறையை பின்பற்றுகின்றன.
CSI Holy Trinity Church
ஆங்லிக்கன் முறைமை
CSI தூய திரித்துவ ஆலயம், இடையன்குடி

திருமேசையிலிருக்க வேண்டியவை

வடபுறத்தில்
    ஆயர் புத்தகம் வைக்க பயன்படுத்தும் பீடம்.
    காணிக்கை தட்டு (முன்புறம்)
        
தென்புறத்தில்
   தூய வேதாகமம் & மற்ற புத்தகங்கள்
   சிலுவை (முன்புறம்)
   
நடுவில்
    திருவிருந்து இரசப்பாத்திரம் (ஒழுங்கின்படி)
    (நற்கருணை வழிபாடு இருந்தால் மட்டும்)

குறிப்புகள்

📚திருவிருந்து வழிபாட்டின் போது, திருமேசையில் ஆயர் பயன்படுத்தும் வண்ணம், பாடல் புத்தகம், சுருக்க ஜெப புத்தகம் & ஆராதனை முறைமை புத்தகம் இருக்க வேண்டும்.

⚡திருமேசையை குருப்பட்டம் ஆயர்கள் மட்டுமே வழிபாட்டின் போது பயன்படுத்த வேண்டும்.

🌹பூக்களை வைக்க விரும்பினால், திருவிருந்தின் போது நடுவில் வைக்காமல்,  நன்றாக இடம் இருந்தால்  இரண்டு புறங்களிலும் வைக்கலாம்.

🕯️அது போலவே மெழுகுவர்த்தி அல்லது light stand வைக்கும் வழக்கம் இருக்குமென்றால் அதை நடுவில் வைக்காமல், ஓரங்களில் வைக்கலாம்.

🍸காணிக்கை பாடலின் போது துணை மேசையில் வைத்தே திருவிருந்திற்கு ஆயத்தம் செய்ய வேண்டும். திருமேசையில் வைத்து ஆயத்தம்செய்யக்கூடாது. இந்த துணை மேசை வடபுறத்தில் இருக்க வேண்டும். 


    

Post a Comment

6 Comments

Unknown said…
Super, it's very useful, please upload more about church..
Meyego said…
Thank You. God is Good.
Sure we will do.
John Peter said…
Amazing information about church altar. Praise God
Anonymous said…
Thank you Annan,