அரசோ, தனியாரோ, தன் பணியை இறைப்பணியாக, மக்கள் சேவையாக எண்ணி தொண்டாற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் திருநாள் வாழ்த்துக்கள். இறையாசியோடு உங்கள் நற்பணி சிறக்கட்டும்...
இந்திய ஆசிரியர் தின வரலாறு
இந்திய ஆசிரியர் தினமானது செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவமேதையுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இவரின் பிறந்தநாளானது ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசத் தந்தை காந்தியடிகள் இவரைப் பார்த்து சொன்னாராம்: "நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன்." மாணவர்களை தனது பிள்ளைகள் போல் பாவித்து அவர்களுக்கு அறிவூட்டியவர். மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களை தெளிவுப்படுத்தியவர். தன் வீட்டுக்கே வந்து மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கலாம் என்ற உரிமையைக் கொடுத்தவர். படிக்க வேண்டும், படித்துத் தெளிய வேண்டும், தெளிந்து அதன்படி நடக்க வேண்டும், நாம் பெற்ற கல்வியை நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடம் நடத்திய பிதாமகன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.
இவர் நாட்டின் முதல் குடியரசு துணைத்தலைவராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் 1975ஆம் ஆண்டு மறைந்தாலும் இன்றைக்கும் ஆசிரியப் பணிக்கு சிறந்த மாதிரியாக கருதப்படுகிறார்.
2021 ஆம் ஆண்டின் ஆசிரிய தின விழாவில் உங்கள் சிந்தனைக்கு மேயேகோ_விடமிருந்து....
உங்கள் வாழ்வுக்கு வேதத்திலிருந்து...
2 Comments