இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் செப்டம்பர் மாதத்தின் முதல் நாளிலே உங்கள் யாவரையும் அன்போடு வாழ்த்துகின்றேன். கிருபையும் சமாதானமும் உங்கள் அனைவரோடுங்கூட இருந்து இந்த மாதம் முழுவதும் வழிநடத்துவதாக.
இறைஇயேசுவில் பிரியமானவர்களே...
நீங்கள் தினம்தோறும் செய்தித்தாளில் வாசித்துப் பார்ப்பீர்கள் என்றால், ஏதோ ஒரு வகையிலே பொருளாதார நெருக்கடியை குறித்ததான செய்திகளை நாம் வாசிக்க முடியும். இந்திய தேசமானது பொருளாதாரத்தில் இக்கட்டான நிலையில் இருப்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஏன் நீங்கள் கூட உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலே, குடும்ப வாழ்க்கையிலே, தொழில் துறையிலே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டே இருக்கலாம். இறை நம்பிக்கை உள்ள உங்களைப் பார்த்து ஆண்டவர் இந்த நாளிலே சொல்லக்கூடிய காரியம் நீதிமொழிகள் 28.25 ஆம் வசனத்தின் பின்பாகம்:
"கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்."
செழிப்பு என்கிற வார்த்தையானது எபிரேய மொழியில் dazen என்ற வார்த்தையில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்த வார்த்தையின் உடைய நேரடிப் பொருள் என்னவெனில் கொழுத்துப் போய் இருக்கின்ற அல்லது திருப்தியாய் இருக்கின்ற என்பதாகும்.
இந்த நாளில் இறைவன் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் செழிப்பானது எப்படி இருக்கும் என்று சொல்லி மூன்று காரியங்களை தியானிக்க இருக்கின்றோம்.
1. செழிப்பான இடம்
நெகேமியோ 9.35
உபாகமம் 3.6
2. செழிப்பான மேய்ச்சல்
1 நாளாகமம் 4.40
சங்கீதம் 23. 1 - 2
3. செழிப்பான வளர்ச்சி
சங்கீதம் 92.12
முடிவாக....
இந்த மாதத்திற்கென்று இந்த வசனம் மட்டுமே என்று சொல்லி எடுத்துக்கொள்ளாதீர்கள். செழிப்பு என்பது குறித்து இந்த நாளில் நாம் கற்றிருக்கின்றோம். உங்கள் நம்பிக்கையை செழிப்பின் மீது அல்ல; அந்த செழிப்பைத் தருகின்ற கடவுள் மீது வையுங்கள்; ஏனென்றால் அவரே ஐசுவரியத்தை சம்பாதிப்பதற்கு பலத்தை தருகின்றவர். கடவுள் நமது வாழ்நாள் பரியந்தம் ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தத்தின்படி நம்மை வழிநடத்திச் செல்வாராக.
0 Comments