Ad Code

தடைகளைத் தாண்டி.... | Cross the Barriers

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் பல ஏற்றத் தாழ்வுகளை தினமும் கடந்து வருகின்றோம். நாம் சந்திக்க நேரிடும் மனிதர்களின் குணம் பல வகைகள். நம்மை ஊக்கப்படுதிவோருண்டு.... தைரியம் கொடுப்பார் உண்டு.... அதே நேரத்தில் துஷிப்போர் உண்டு, எள்ளி நகையாடும் நபர்கள் உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையை ஒவ்வொருவரும் கடந்து வந்திருபோம்... 
ஸ்கூல ஒதுக்கப்பட்ட நிலை அல்லது வீட்டில் நம்மை யாரும் புரியவில்ல என்று இருக்கலாம். இன்றைக்கு பெரும்பாலானவர்கள் சொல்லக் கூடியது, என்னுடைய திறமையை புரிந்து கொள்ள யாரும் இல்லை. சில நேரங்களில் தாழ்வு மன்பான்மைக்கு ஆளாவதையும் பார்க்க முடியும். இந்த சூழ்நிலையில் என்ன செய்வது? எப்படி கையாள்வது?

 நம் திறமைய புரிந்து கொண்டு, தடைகளை கண்டு கொள்ளாமல், தைரியமாக முன் வந்து செயலாற்றும் பண்பு வேண்டும். நாம் ஒதுங்கி வாழ்வது சரியல்ல. பிறர் வார்த்தைகளை கேட்டு சோர்ந்து போக கூடாது. நம் திறமைகளை பயன்படுத்தாமல் இருப்பதும் சரியல்ல... வேதத்தில் ஒரு காரியத்தை நாம் பார்ப்போம். 1 சாமுவேல் 17 ஆம் அதிகாரம். தாவீது கோலியாத் போர் குறித்து நாம் அறிவோம். அதற்கு முன் நடைபெற்ற காரியங்கள் குறித்து நாம் சிந்திப்பது அவசியம்.

1. முதல் தடை - By Brother 

 1 சாமுவேல் 17 . 28 - 29. அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். 3. அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, இந்த வசனங்கள் தாவீது போருக்கு ஆயத்தமாக இருந்த போது, அவன் மூத்த சகோதரன் தாவீதின் மேல் கோபப்படுகிறான். அடுத்து ஆடு மேய்க்கும் நீ போருக்கா என்று கிண்டல் அடிக்கிறான். தன் சொந்த தம்பியின் திறமையை எலியாப் புரிய வில்லை. ஆனால் தாவீது அந்த தடையும் தாண்டி சென்று போருக்கு செல்கிறான். 

 2. இரண்டாம் தடை - By King 

 1 சாமுவேல் 17.33 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான். தாவீது சவுல் ராஜாவிடம் சென்று தான் செல்ல தயார் என்ற போது, ராஜா தாவீதிடம் நீ வாலிபன் உன்னால் முடியாது என்று சொல்லுகிறார். ஆனால் தாவீது அதையும் மீறி சென்றார். 

 3. மூன்றாம் தடை - By Enemy 

 சாமுவேல் 17:42-43. பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான். பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். கோலியாத் தாவீதை ஏளனமாக பேசுகிறார். தாவீதை நாய் பிடிக்கிறவன் என்ற அர்த்தத்தில் கிண்டல் அடிக்கிறான். தாவீதின் உடலை அசட்டை பண்ணுகிறான். தாவீது அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் செயல் படுகிறான். 

நிறைவாக...
என்ன நடந்தது... 
அசட்டை செய்த கோலியாத் தோற்று போகிறான்; 
உன்னால் முடியாது என்ற சவுல் தாவீதை பாராட்டுகிறார்; 
கோபப்பட்ட அண்ணன் ஒரு வீரன் மட்டுமே... தாவீது ராஜாவாக மாறுகிறார். 

Don't worry about others wordings & misbehaviours. Do all things with God. பிலிப்பியர் 4.13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

Post a Comment

0 Comments