Ad Code

வேதத்தில் பனைமரம் | Palm Trees in the Tamil Bible


நாம் பயன்படுத்துகின்ற பவர் மொழிபெயர்ப்பு தமிழ் திருமறையில், தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரசித்திப்பெற்ற மரமான பனைமரத்தை குறித்து நான்கு முறை வந்துள்ளது.

சங்கீதம் 92.12 
உன்னதப்பாட்டு 7.7 & 8 
எரேமியா 10.5
உண்மையாகவே இஸ்ரவேல் தேசத்தில் பனை மரம் காணப்படுகின்றதா?
ஏன் பனை மரம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருக்கக்கூடிய வார்த்தைகளை அதனுடைய அர்த்தம் மாறாமல் இன்னொரு மொழியில் வார்த்தைகளில் மொழிபெயர்க்க கூடியது. அதே நேரத்தில் எழுத்துப்பெயர்ப்பு அல்லது ஒலிபெயர்ப்பு செய்யப்படும். இவற்றோடு மாத்திரமல்ல வேதாகமத்தில் சூழிசைவு சார்ந்த மொழிபெயர்ப்பும் காணப்படுகின்றது.

அந்த வகையில்தான் பனைமரம் என்ற வார்த்தை சூழிசைவு சார்ந்து (Contextual Translation) பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேல் நாட்டிலே பேரீச்சை மரங்கள் (Palm Trees) காணப்படுகின்றன. ஆனால் பனை மரங்கள் அங்கு இல்லை. இந்த பேரீச்சை மர (Data - Palm) வகைகளும் தமிழ் நாட்டில் காணப்படுகின்ற பனை இனத்தை (Palmrya) சார்ந்தவை. ஆகவே நம்முடைய முன்னோர்கள் நாம் எளிதாக அதனுடைய கருப்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் நம்முடைய பகுதியில் காணப்படுகின்ற பனைமரத்தை பேரீச்சை மரத்திற்கு பதிலாக பயன்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால் பேரிச்சை மரங்கள் என்ற வார்த்தையும் தமிழ் வேதாகமத்தில் வருகின்றது. 
ஏன் இந்த நான்கு இடத்தில் மாத்திரம் இவ்விதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அந்த இடங்களில் தான் பனைமரத்தை ஒப்புமைப்படுத்தி (உருவகம் போல்) வருகின்றன. பேரீட்சை மரத்தோடு ஒப்புமைப்படுத்தி மொழிபெயர்ப்பதைவிட அதற்கு ஒத்த பனைமரத்தோடு ஒப்புமைப்படுத்தி மொழிபெயர்ப்பது மிகவும் ஏற்புடையது என்று கருதியிருக்கிறார்கள்.

இலங்கை சைவ தமிழ் புலவர் ஆறுமுக நாவலர் அவர்கள்தான் பாலஸ்தீனத்திலுள்ள பேரிச்சை மரத்தினை தமிழ்நாட்டிலுள்ள பனை மரத்தோடு இணைத்து மொழிபெயர்ப்பில் உதவி இருக்கின்றார்கள் என்ற ஒரு வரலாற்றுக் குறிப்பும் காணப்படுகிறது  இவ்வகையான மொழிபெயர்ப்பு தவறல்ல; பிழை அல்ல. மாறாக நாம் எளிதாக கருப்பொருளை அறிந்து கொள்வதற்காக நம்முடைய முன்னோர்கள் விட்டுச்சென்ற பரிசு.

திருவிவிலியம் என்ற பொது மொழிபெயர்ப்பில் பனைமரம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படாமல், பேரீச்சை என்ற வார்த்தையே இந்த நான்கு வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பேரீச்சை மரம் & பனைமரம் இரண்டும் எதை வெளிப்படுத்துகின்றன என்று சொல்லி நாம் பார்க்கும் பொழுது,

1. Be long lived - நீடித்த ஆயுள்
2. Stately - கம்பீரமான
3. Upright - நேரிய
4. Useful - மிகவும் பயனுள்ள
5. Fruitful - பெருக்கம்

God bless you as palm trees...

Post a Comment

2 Comments