Ad Code

Happy Rosh Hashanah | யூத புத்தாண்டு

Rosh Hashanah என்றழைக்கப்படும் யூத புத்தாண்டு விழா திஸ்ரே 1 ஆம் தேதி (Start of first day of Tishrei) தொடங்கி, திஸ்ரே 2 ஆம் தேதி (End of second day of Tishrei) முடிகிறது. திஸ்ரே (Tishrei) என்பது எபிரேய காலண்டரில் ஏழாவது மாதமாக இருப்பினும் யூத மரபின்படி சிவில் ஆண்டின் துவக்க நாளாக (Beginning Day of Civil Year) திஸ்ரே 1 ஆம் தேதியை ஆசரிக்கிறார்கள். 

Rosh Hashanah (Hebrew: רֹאשׁ הַשָּׁנָה‎) என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் ஆண்டின் துவக்கம் அல்லது தலைமை (head [of] the year). 

இந்த புனித விடுமுறை நாளின் வேதாகம பெயர் Yom Teruah (יוֹם תְּרוּעָה‎). இதன் அர்த்தம் "கத்துதல் அல்லது வெடிக்கும் நாள்" (day of shouting or blasting). 

ஆபிப் / நிசான் மாதம் தான் எபிரேய காலண்டரில் முதல் மாதமாகும். யூதர்கள் ஏன் ஏழாவது மாத்தின் துவக்க நாளில் புத்தாண்டை ஆசரிக்கிறார்கள் என்றால், கடவுள் கொடுத்த கட்டளை அது. லேவியராகமம் 23.23 - 25 வசனங்களில் இதைக் குறித்து வாசிக்க முடியும். திஷ்ரே என்பது ஒரு பாபிலோனிய கல்தேய மொழியிலும் உள்ள மாதமாகும், அதன் அக்காடியன் வார்த்தையான திஷ்ரிட்டு என்பதின் அர்த்தம் "தொடக்கம்" ஆகும். மேலும் இந்த நாட்களில் தான் கடவுள் தம் படைப்பை துவக்கினார் என்று நம்பப்படுகிறது. 

L’shana tovah என்று யூதர்கள் தங்கள் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவிப்பார்கள். இதன் அர்த்தம் "நல்லாண்டாக அமையட்டும்" (for a good year). இதன் முழு வரியான “L’shanah tovah tikatev v’taihatem” இன் அர்த்தம் "நீங்கள் ஒரு நல்ல வருடத்திற்கு பொறிக்கப்பட்டு சீல் வைக்கப்படலாம்" (May you be inscribed and sealed for a good year).

அன்றைய நாளின் முறைமைகள்
ஜெப ஆலயத்தில் பிரார்த்தனை (Praying in Synagogue),
தனிப்பட்ட பிரதிபலிப்பு (Personal Reflection)
ஷாஃபாரைக் (எக்காளம்) கேட்பது அல்லது ஊதுதல் (hearing or blowing the shofar, a cleaned-out ram's horn).
தகன பலியிடும் முறை பண்டைய காலத்தில் இருந்தது.

ஏன் இரண்டு நாட்கள் கொண்டபடுகிறது? 
யூத நாட்காட்டி சந்திர சுழற்சியை (Lunar cycle) அடிப்படையாகக் கொண்டது. அமாவாசை எழுந்ததும் ஒரு புதிய மாதம் தொடங்கியது. ஒவ்வொரு அமாவாசையின் எழுச்சியும் (Rabbinic Council) ரபினிக் கவுன்சிலால் தீர்மானிக்கப்படும். பின்பு செய்தி தூதுவர்கள் வாயிலாக புதிய மாதம் தொடங்கியதாக மக்களுக்கு செய்தி அனுப்புவார்கள்.

இந்த 2024 (Gregorian Calendar) ஆண்டு அக்டோபர் 2  ஆம் தேதி  மாலையில் தொடங்கி 4 ஆம் தேதி மாலையில் முடிகிறது.
            
          L’shanah tovah tikatev v’taihatem
                  &   Happy Rosh Hashanah to All

Post a Comment

0 Comments