தென்னிந்திய திருச்சபை, திருநெல்வேலி திருமண்டலம், திப்-மீனாட்சிபுரம் சேகரத்தின் சேகர சபையும் 200 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு கொண்ட கிறிஸ்து உயிர்த்தெழுதலின் ஆலயம் Christ Resurrection Church, பாவூர்சத்திரத்திற்கு தெற்கே 2 Km தொலைவில் உள்ளது. மீனாட்சி என்ற ஒரு பெண்மணி இந்த பகுதியிலுள்ள இடங்களை கொடுத்ததால் இப்பெயர் வந்ததாக வாய்வழி செய்தி உண்டு. அரசுமுறைப் பயன்பாட்டில் திப்பனம்பட்டி என்று பெயருள்ளது.
ஏறக்குறைய 1773 ஆம் ஆண்டு முதல் 1923 வரை 150 ஆண்டுகளுக்கு மேலாக கூரைக்கோயிலாக காணப்பட்டிருக்கிறது. 1923 ஆம் ஆண்டு நெல்லைப் பேராயர் கனம். டப்ஸ் அவர்களால் புதிய ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி (சித்திரை 1) புதிய ஆலயமானது பேராயர் கனம். பிரெட்ரிக் வெஸ்டர்ன் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்று வித்தியாசமான பெயராக, கிறிஸ்து உயிர்த்தெழுதலின் ஆலயம் என்று சூட்டப்பட்டது. 1969 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மணிமண்டபமானது திருமண்டல உப தலைவர் அருட்திரு. ஜோசப் ஆபிராகம் ஐயரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடக்கத்தில் நல்லூர் சர்க்கிளில் இருந்த சபையானது தென்காசி சர்க்கிளான பின்பு அங்கு மாறியது. அப்போது 500 பேர் சபையில் அங்கம் வகித்துள்ளனர். 1971 ஜனவரி 20 அன்று பேராயர் கனம். தாமஸ் சாமுவேல் காரட் அவர்கள் இச்சபைக்கு வருகை புரிந்த போது, அவருக்கு கொடுக்கப்பட வரவேற்பிதழ் இன்றும் ஆலயத்தில் உள்ளது.
திருமண்டலத்தில் சேகரங்கள் பிரிக்கப்பட்ட போது, பாவூர்சத்திரம் சேகரத்தின் கீழ் வந்தது. 200 குடும்பங்கள் சபையில் உள்ளன. ஒரு தொடக்கப்பள்ளியும் உள்ளது. பின்பு 01.04.2005 முதல் தனி சேகரமாக அறிவிக்கப்பட்டு, 10 சபைகளோடு இயங்கி வருகிறது.
சிறிய ஆலயத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, 14.04.2018 அன்று திருமண்டல குருத்துவ காரியதரிசி Rev. ஸ்டீபன் செல்வின் ராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 14.04.2019 அன்று மேற்கு சபைமன்ற தலைவர் Rev. Dr. சற்குணம் ஐயரவர்களால் கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்து.
இறையருளால் சபை மக்களின் காணிக்கைகளை கொண்டு மட்டுமே புதிய ஆலயம், கோபுரம் கட்டப்பட்டது. 2020 ஆம் ஆண்டு பணிகள் முடிவு பெற்றாலும், கொரோனா ஊரடங்கின் காரணமாக திறக்க தாமதமானது. இறைவிருப்பப்படி, 14.04.2021 அன்று பேராயர் Rt. Rev. சந்திர சேகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தினமும் இறைவழிபாடு நடைபெற்று வருகிறது.
கடவுளின் அருளும் அமைதியும் உங்களுக்கு உண்டாவதாக. ஆண்டவருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
About the Author
Y. Golden Rathis B.A., B.Sc., B.Th.,
Photos by
James & Shalom
4 Comments