Ad Code

ஏடிஎம் வரலாறு | History of ATM

நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்துப் பயன்படுத்துவதற்கொரு வழியை சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்தில் இருந்து யோசனை கிடைத்தது. அங்கு சாக்லேட்; இங்கு பணம்.
                        - ஜான் ஷெப்பர்டு பாரன்

  

                          
உழைத்து சேர்த்த பணத்தை பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று இல்லை. பெட்டியில் இருந்து எடுக்கும் நவீன வழக்கத்தில் இருக்கிறோம். ஆம் அது தான் ATM என்ற தானியங்கி பண இயந்திரம் (Automated Teller Machine).

ஜான் ஷெப்பர்டு பாரன் (John Shepherd Barron) என்பவர் தலைமையிலான குழு, பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 27.06.1967  அன்று ATM ஐ நிறுவியது. முதலில் ATM ஆனது வங்கியில் வழங்கப்படும் காசோலையில் உள்ள குறியீடுகளை வைத்து பணம் எடுக்கும் வகையில் இருந்தது. பின்னர் வாடிக்கையாளரின் 6 இலக்க கடவுச் சொல் தருமாறு மேம்படுத்தப்பட்டது.  அடுத்து ATM அட்டை நடைமுறைக்கு வந்தது.


இன்றைக்கு வங்கி அட்டையே  (ATM Card) இல்லாமல் அலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை பயன்படுத்தி பணம் எடுக்கும் மற்றும் செலுத்தும் முறை வந்துவிட்டது. இது வங்கிக்கு செல்வதை பெருமளவு குறைத்து விட்டது.


1987 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் HSBC மூலம் மும்பையில் முதல் ATM அறிமுகப்படுத்தப்பட்டது. 

1984 களில், உலகளவில் நிறுவப்பட்ட ஏடிஎம்களின் எண்ணிக்கை மொத்தம் 100,000. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுவதும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன. 2021 க்குள் நான்கு மில்லியனை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
         

Post a Comment

0 Comments