நீரின்றி அமையாது உலகு என்கிறது வள்ளுவம். ஆம் நாம் தெரிந்தோ தெரியாமலோ தினம்தோறும் ஏதோவொரு வகையில் தண்ணீரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
புலப்படாத தண்ணீர் அல்லது மறைநீர் என்பது உணவுப் பொருட்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்ய செலவிடப்பட்ட தண்ணீரின் தேவையை குறைத்து பேசுவதாகும்.
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
கண்ணுக்கு தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரை பயன்படுத்துகிறோம்.
முதல்வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக தண்ணீரை உபயோகிக்கிறோம்.
🚍 1.1 டன் எடைகொண்ட இலகு ரக வாகனத்தை உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீரும்,
👖 ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது
இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக உபயோகிக்கிறோம்.
🍎 ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822 லிட்டர் தண்ணீரும்,
🍚 ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780 லிட்டர் தண்ணீரும்,
🌾 ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீரும்,
☕ ஒரு கிலோ காபி கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.
இந்த அளவிற்கு கண்ணுக்குப் புலப்படாத வகையில் மழைநீரை நாம் பயன்படுத்துகிறோம் ஆகவே தண்ணீரின் சேமிப்பு மிகவும் முக்கியமானது. தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்குவதை யும் நாம் தவிர்க்க வேண்டும்.
0 Comments