Ad Code

பாவ நிவிர்த்திப் பண்டிகை | A Day of Atonement

         எக்காளப் பண்டிகைக்கு அடுத்து வரும் பண்டிகை நாள் இதுவாகும். நிவிர்த்தி (Atonement) என்பது பரிகாரம் மற்றும் ஈடு செய்தல் என்று பொருள். இதில் விசேஷித்த கொண்டாட்டங்கள் இல்லாவிட்டாலும் மிக முக்கியமான ஆசரிப்பு நடைபெறும்.
A Day of Atonement
A Day of Atonement

பண்டிகையின் நியமங்கள் என்ன?

📝 ஆண்டிற்கு ஒரு முறை அனுசரிக்கப்படும்.

📝 எபிரேய காலண்டரில் ஏழாம் மாதம் (எத்தானீம்) பத்தாம் தேதியில் இது ஆசரிக்கப்படும். பாவநிவர்த்தி நாள் (yom kippur) என்று அழைக்கப்படுகிறது.

📝 பரிசுத்த சபைகூடும் சிறப்பான ஓய்வுநாளாகும். 

📝 இது பாவத்திற்காக பலி செலுத்தும் நாளாகும்.

📝 இந்த நாளில் மட்டுமே பிரதான ஆசாரியர் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முடியும்.

பலியிடும் முறை

தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி பாவ நிவிர்த்திக்காக இரு ஆடுகளை கொண்டு வருவார்கள். அவற்றில் ஒரு ஆடு பாவ மண்ணிப்புக்காக பலியிடப்படும். அடுத்த ஆட்டைக் கொல்லாமல், அவர்களின் பாவ உணர்வு நீங்க (Guilty) போக்காடாக வனாந்தரத்தில் விடப்படும். 

வேதாகம பகுதிகள்

            யாத்திராகமம் 30.10
            லேவியராகமம் 16

சிந்தனைக்கு...

பாவநிவாரணபலி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவநிவாரணராகப் பலிசெலுத்தப்பட்டதிற்கு நிழலாக உள்ளது என்று எபிரெய நிருபத்தில் வாசிக்கிறோம். பலியிடப்பட்ட ஆடு கிறிஸ்துவின் மரணத்தையும், போக்காடு கிறிஸ்துவின் உயிர்ப்பையும் குறிக்கிறது. ஆகவே விசுவாசிகள் கிறிஸ்துவின் மூலமாக கடவுளின் கிருபாசனத்தண்டையில் சேரக்கூடியவர்களாயிருக்கின்றனர்.

Post a Comment

2 Comments