இஸ்ரவேல் மக்கள் ஆசரித்த பண்டிகைகளில் ஒன்று இந்த பூரீம் பண்டிகை. கடவுள் கொடுத்த கட்டளை போல் இந்த பண்டிகை வேதத்தில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இறை நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியைக் கொண்டாடி, கடவுளின் திருப்பெயரையும், அவரது வல்லமையையும் போற்றி மகிழும் வண்ணம் ஆசரிக்கப்பட்டதாக வேதத்தில் வருகிறது.
பூரீம் பண்டிகையின் வரலாறு
கிமு 5 ஆம் நூற்றாண்டில் அகாஸ்வேரு என்னும் அரசனின் (King Ahasuerus) காலத்தில் மொர்தெகாய் இப்பண்டிகையை நிறுவினார். பகைஞனாகிய ஆமான் என்பவருடைய பொல்லாங்கான திட்டங்களிலிருந்து யூதர்கள் விடுவிக்கப்பட்ட நாளை நினைவுகூர்ந்து இப்பண்டிகை கொண்டாடப்பட்டது.
பின்னர் மக்கபேயரால் கி.மு.164 - இல் எருசலேமில் தேவாலயம் சுத்திகரிக்கப்பட்டு மீட்கப்பட்ட நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இப்பண்டிகை பின்னர் கொண்டாடப்பட்டது. இது ஒளியின் பண்டிகை என்றும் பெயர்பெற்றது.
பூரீம் பெயர்க்காரணம்
(Pur) என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் சீட்டு (Lot - A piece of paper) ஆகும்.
ஆமான் தன் மத நம்பிக்கையுடன் தொடர்புடைய ஜோசிய நிலையில் பூர் என்னும் சீட்டைப் போட்டு, 11 மாதங்களுக்குப் பின் யூதர்களை அழிப்பதற்கான நாளைக் குறித்தான். ஆனால் அது அவனுக்கு ஆபத்தாக முடிந்து; யூதர்களுக்கு வெற்றியாக மாறியது. யூதர்கள் அழிவினின்று தப்புவிக்கப்பட்ட நாளைப், பண்டிகை நாட்களாக கொண்டாட மொர்தெகாய் அறிவித்தான். பூர் என்ற சீட்டைப் போட்டு யூதர்களை அழிக்க நினைத்ததால், அந்தப் பண்டிகை பூரீம் என்று பெயரிடப்பட்டது.
வேதாகம ஆதாரம்
எஸ்தர் சரித்திரம்
பண்டிகையின் சிறப்பம்சம்
இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும்
இஸ்ரவேலர் விருந்துண்டு சந்தோஷமாய்க் இரண்டு நாட்கள் கொண்டாடுவர். இப்பண்டிகை யூதர்களுக்கு விடுமுறை நாளாகும்.
இந்தப் பண்டிகையில் 3 ஜெபங்களை ஏறெடுப்பர்.
1. தங்களை தகுதியுள்ளவர்களாக ஏற்றுக் கொண்டதற்காக நன்றி ஜெபம்;
2. தங்கள் முன்னோர்களைக் காத்துக் கொண்டதற்காக நன்றி ஜெபம்;
3. இன்னுமொரு பூரிம் கொண்டாட வேண்டும் என்பதற்காக நம்பிக்கையின் ஜெபம்.
கற்பிக்கும் பாடம்
சந்தர்ப்பத்திற்காக விதிக்கப்படும் சட்டதிட்டங்களையும் கடவுள் பயனற்றதாக மாற்ற வல்லவர் என்பதை பூரிம் நமக்கு நினைவுபடுத்துகின்றது. சத்துருக்களின் சதித்திட்டத்தை கடவுளால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
0 Comments