தமிழ் வடமொழியின் மகள் அன்று;
அதை தனி குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி;
தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.
- பேராயர் கால்டுவெல்.
1856 இல் பேராயர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில், திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிகளுக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடத்திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 28 மொழிகள் திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. தென் திராவிட மொழிகளுக்குள் வரும் தமிழ் மொழியானது மிகுந்த தொன்மையும் மேன்மையும் வாய்ந்த மொழி.
0 Comments