Ad Code

ஒரு சுவிஷேகனின் மடல் | Gospel Sunday Poetry | மறைபரப்பு ஞாயிறு

 


ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமையில்,

விதவிதமான கொண்டாட்டம்;

தின்பண்டங்களோடு நடப்பு;

இரட்சிப்பற்ற குருடர்களின் வழிகாட்டல்;

கொட்டு அடித்து சிறுவர்கள் ஆட்டம்;

வாலிபர்கள் உற்சாக பேச்சு;

தாய்மார்கள் மற்றோருக்குப் புரியாத பாட்டு;

ஆண்கள் மண் ஓட்டாமல் வீர நடை;


சிற்சில இலவச பிரதிகள்;

வாசிக்காத பழைய புத்தகங்கள்;

திறமையை பயன்படுத்துதல் என்று

திணறவைக்கும் தேவையற்ற நிகழ்ச்சிகள்;

இலவச பிரதிகள் மட்டும் யாருக்கோ,

கறியும் சோறும் சுற்றிய களைப்புக்கு;

நற்செய்திக்காய் அடிபட வேண்டிய நாம்,

நற்சாட்சியிலா வாழ்வால் துரத்தப்படுகிறோம்;


பரலோகத்தில் மகிழ்ச்சி இல்லை,

ஆனால் பக்கம் பக்கமாய் அறிக்கை;

கணக்கு காட்டுவதில் தவறுவதுமில்லை;

உண்மையில் சிலரோ தகுந்த ஆயத்தமாய்,

தன்னால் முடிவதை தவறாது செய்கின்றனர்;

ஆலயப் பிரசங்கத்தில் சுவிசேஷப்பணி

ஆனால் அறிவிப்போ சுவிசேஷ சுற்றுலா

நிஜத்தில் நடப்பதோ... (என்னவென்று எழுத?)






Post a Comment

2 Comments